அக்கா சாவில் சந்தேகம்; போலீசில் தம்பி புகார்

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே அக்கா சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி செல்வி, 40; திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். செல்வம் குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்குமிடையே தகராறு



திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே அக்கா சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி செல்வி, 40; திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். செல்வம் குடிப்பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வயலுக்குச் சென்றவர், வேப்ப மரத்தில் துாக்கில் தொங்கி இறந்தது இரவு 10:00 மணியளவில் தெரியவந்தது.இதுகுறித்து கலையநல்லுார், காட்டுக்கொட்டகையைச் சேர்ந்த அவரது தம்பி கண்ணன், 31; அக்கா சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X