வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு அகற்றுவதில்...அலட்சியம்! முதல்வர் அலுவலக அழுத்தம் காரணமா?| Dinamalar

வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு அகற்றுவதில்...அலட்சியம்! முதல்வர் அலுவலக அழுத்தம் காரணமா?

Updated : செப் 13, 2022 | Added : செப் 13, 2022 | கருத்துகள் (5) | |
காஞ்சிபுரம் : வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பில் இருந்த 1,400 வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த, மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் உயர் நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறப்பதாக புகார் எழுந்துள்ளது.பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரின் குறுக்கே வளைந்து நெளிந்து,
காஞ்சிபுரம், வேகவதி ஆறு,  சென்னை உயர் நீதிமன்றம், Kanchipuram, Vegavati River, Chennai High Court,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


காஞ்சிபுரம் : வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பில் இருந்த 1,400 வீடுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த, மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகம் அழுத்தம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் உயர் நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறப்பதாக புகார் எழுந்துள்ளது.பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரின் குறுக்கே வளைந்து நெளிந்து, செல்கிறது. நகரையொட்டி செல்வதால், கடந்த 30 ஆண்டுகளில், ஆற்றின் கரை ஓரங்களில் மெல்ல அதிகரித்த ஆக்கிரமிப்பு வீடுகள், நாளடைவில், ஆற்றுக்குள்ளேயே வீடுகள் முளைக்க துவங்கின. சிறுக, சிறுக முளைத்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையும் வேடிக்கை பார்த்திருந்தது. இதன்காரணமாக, நாளடைவில், 1,400 வீடுகள் வேகவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ளன.வேகவதி ஆறு 300 மீட்டருக்கு மேல் அகலமாக இருக்க வேண்டியது கால்வாய் போல் சுருங்கி ஓடுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏதும் ஏற்படாமல் இருந்த காரணத்தால், ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களுக்கு பிரச்னையின்றி இருந்தனர்.latest tamil news


ஆனால் 2015ல் ஏற்பட்ட பெருமழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுபோன்ற சூழல் அடுத்த முறை ஏற்பட கூடாது என்பதற்காக, அப்போதைய கலெக்டர், சப்--கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுத்தனர். தொடர்ந்து, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 2,112 வீடுகள், 200 கோடி ரூபாய் மதிப்பில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்க கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளை, 2019ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் திறந்து வைத்தார்.இந்த வீடுகளை வழங்க, ஆக்கிரமிப்பாளர்களுடன் 2020 ல் அப்போதைய கலெக்டர் பேச்சு நடத்தினார்.அப்போது, வீடுகள் மொத்த மதிப்பு 15 லட்ச ரூபாய் எனவும், ஆக்கிரமிப்பாளர்கள் 1.5 லட்ச ரூபாய் செலுத்தினால் போதும் என தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பங்களிப்பு தொகையும் செலுத்த, ஆக்கிரமிப்பாளர்கள் மறுத்து விட்டனர்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அமைச்சர் அன்பரசன் கடந்தாண்டு வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்த பின், பங்களிப்பு தொகை 1.5 லட்ச ரூபாய் செலுத்த வங்கி கடன் ஏற்பாடு செய்யப்படும் என்றார். ஆனால், அதன்பிறகு, வேகவதி ஆற்றை மீட்டெடுக்க ஆய்வு கூட்டம் நடத்தியதாக தெரியவில்லை.மூன்று மாதங்களுக்கு முன்பாக, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில், ஜூன் 11 ம் தேதி, வேகவதி ஆறு ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயாராகினர். ஆனால், திடீரென மொத்த நடவடிக்கைகளும் பின்வாங்கப்பட்டன.அத்துடன் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டன.நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பார்க்காமல் அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகள் மூலம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றம் உற்று கவனித்து வரும் நிலையில், வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.இதுகுறித்து, பெயர் வெளியிடாத அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது :ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது ஏற்படும் சட்டம்- - ஒழுங்கு பிரச்னைக்கு அரசு தயங்குகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது தீக்குளிப்பது போன்ற சம்பவங்கள் நடப்பதால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என, நினைக்கின்றனர். ஜூன் 11ம் தேதி மொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் தயாரானது. ஆனால், முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணத்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இத்தனை அரசியல் நிலவுகிறது. மொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், மேலிடத்தில் இருந்து எந்த அழுத்தமும் தராமல் இருந்தால், ஆக்கிரமிப்புகளை பிரச்னையின்றி அகற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X