தண்டையார்பேட்டையில் கச்சா எண்ணெய் கசிவு; 6 மாதங்களுக்குள் அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு| Dinamalar

தண்டையார்பேட்டையில் கச்சா எண்ணெய் கசிவு; 6 மாதங்களுக்குள் அகற்ற தீர்ப்பாயம் உத்தரவு

Added : செப் 13, 2022 | கருத்துகள் (2) | |
சென்னை : 'தண்டையார்பேட்டை பகுதியில் மண்ணில் கலந்துள்ள பெட்ரோலிய பொருட்களை, பி.பி.சி.எல்., எனப்படும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை துறைமுகத்திலிருந்து, தண்டையார்பேட்டையில் உள்ள பி.பி.சி.எல்., நிறுவனத்துக்கு, குழாய் மூலமாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.மனு
சென்னை, கச்சா எண்ணெய், பிபிசிஎல், பாரத் பெட்ரோலியம், பசுமை தீர்ப்பாயம் , Chennai, Crude Oil, BPCL, Bharat Petroleum, Green Tribunal,

சென்னை : 'தண்டையார்பேட்டை பகுதியில் மண்ணில் கலந்துள்ள பெட்ரோலிய பொருட்களை, பி.பி.சி.எல்., எனப்படும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை துறைமுகத்திலிருந்து, தண்டையார்பேட்டையில் உள்ள பி.பி.சி.எல்., நிறுவனத்துக்கு, குழாய் மூலமாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.


மனு தாக்கல்


இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கசிந்து, நிலத்தடி நீர் மற்றும் மண் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளிட்ட ஒன்பது பேர், 2013-ல், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.



இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், நீதித்துறை உறுப்பினர்கள் நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர்கள் சத்யகோபால், செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவு:கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆறு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.



அகற்ற வேண்டும்


மண்ணில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் முதல் திட்டத்தை, பி.பி.சி.எல்., நிறுவனம் நிறுத்தி விட்டு, நீரில் பெட்ரோலிய பொருட்கள் கண்டறியப்பட்ட வேறு இடத்தில், இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இந்த இரண்டாவது திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்தி, மண்ணில் கலந்துள்ள பெட்ரோலிய பொருட்களை, பி.பி.சி.எல்., நிறுவனம் அகற்ற வேண்டும். கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீரை சுத்திகரிக்கும் பணியை, ஆறு மாதங்களுக்குள் பி.பி.சி.எல்., மேற்கொள்ள வேண்டும்.மனுதாரர்கள் யாரும் மேற்கொண்டு புகார்களை தெரிவிக்காததால், இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. ஏதேனும் புகார்கள் வந்தால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X