சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்; கோவில் அருகில் சுகாதார சீர்கேடு

Added : செப் 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பின்புறம் உள்ள வடக்கு மாட வீதி உள்ளிட்ட பிற பகுதி மக்களின் வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்காக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க வேண்டிய துாய்மை
சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்;  கோவில் அருகில் சுகாதார சீர்கேடு



காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பின்புறம் உள்ள வடக்கு மாட வீதி உள்ளிட்ட பிற பகுதி மக்களின் வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்காக பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவு நீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க வேண்டிய துாய்மை பணியாளர்கள், அருகில் உள்ள மழை நீர் கால்வாயில் ஓட்டை போட்டு கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதனால், மழை நீர் செல்ல வேண்டிய கால்வாயில், முறைகேடாக கழிவு நீர் வெளியேறி வருகிறது.கோவில் அருகில் கழிவு நீர் வழிந்தோடுவதால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே செல்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வடக்கு மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுவதுமாக நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
13-செப்-202208:43:24 IST Report Abuse
Neutral Umpire ஒரு குழு அமைத்து முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X