பகிங்ஹாம் கால்வாயில் 'செல்பி' மையம் அமைக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு

Added : செப் 13, 2022 | |
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால கலைச்சின்னங்களை பார்வையிட, சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.ஆங்கிலேயர் காலத்தில், நீர்வழித்தடமாக பயன்படுத்தப்பட்ட பகிங்ஹாம் கால்வாய், இப்பகுதியில் கடக்கிறது.நகரின் மேற்கில், கால்வாய் நீண்டுள்ளது. திருக்கழுக்குன்றம் சாலையில் குறுக்கிடும் கால்வாயை கடக்க, ஆங்கிலேயர்
பகிங்ஹாம் கால்வாயில் 'செல்பி' மையம்  அமைக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு



மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால கலைச்சின்னங்களை பார்வையிட, சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.ஆங்கிலேயர் காலத்தில், நீர்வழித்தடமாக பயன்படுத்தப்பட்ட பகிங்ஹாம் கால்வாய், இப்பகுதியில் கடக்கிறது.நகரின் மேற்கில், கால்வாய் நீண்டுள்ளது.

திருக்கழுக்குன்றம் சாலையில் குறுக்கிடும் கால்வாயை கடக்க, ஆங்கிலேயர் கால பாலமும் உண்டு.பழைய பாலத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்ட புதிய பாலம் மற்றும் இணைப்பு சாலை பயன்பாட்டில் உள்ளது.பெரும்பாலான வாகனங்கள், புதிய பாலத்தில் கடக்கின்றன. பழைய பாலத்தில், குறைவானவாகனங்களே கடக்கின்றன.பழைய பாலம் அருகில், கால்வாய் வெள்ள பரப்பு, உயரமான கலங்கரை விளக்கம், பாறைகுன்றுகள் பின்னணியுடன், ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இவ்வழியே கடந்து செல்லும் பயணியர், சாலையை ஒட்டி, மர நிழலில் இளைப்பாறி, நீர்பரப்பு காட்சியை ரசிக்கின்றனர்.பழைய பால பகுதியில், போக்குவரத்து மிக குறைவு என்பதால், சுற்றுலாவிற்கேற்ப, நடை தளம், புல்வெளி, பூச்செடிகள், மரக்கன்றுகள் ஆகியவற்றுடன், 'செல்பி' மையம் அமைத்து, சுற்றுலா பகுதியை மேம்படுத்தலாம். அரசுத் துறையினர் முயற்சிக்க, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X