புதிய கல்வி கொள்கைக்கு குழந்தைகள் கூட தயார்! திருச்சியில் கவர்னர் தமிழிசை பேட்டி

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருச்சி : ''புதிய கல்விக் கொள்கையை ஏற்று, மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கின்றனர். உங்களை போல, எல்லாரையும் நினைத்துக் கொண்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்,'' என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.கும்பகோணம் அருகே, சுவாமிமலையில், 23 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யும்



திருச்சி : ''புதிய கல்விக் கொள்கையை ஏற்று, மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கின்றனர். உங்களை போல, எல்லாரையும் நினைத்துக் கொண்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்,'' என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே, சுவாமிமலையில், 23 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
தெலுங்கானாவில் கவர்னர் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதை பற்றி, நான் கவலைப்படவில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு கட்சி பத்திரிகை, நான் அவமதிக்கப்பட்டதாக எழுதி உள்ளது. நான் என்றுமே அவமதிக்கப்படவும் இல்லை; அலறவும் இல்லை.எதை பார்த்தும் அலற மாட்டேன். புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் நான்.அவமரியாதை என்னை ஒன்றும் செய்யாது.
அவமரியாதை செய்யப்பட்டதாக, மகிழும் கூட்டம் இங்கு இருப்பது தான், எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நம்மை சார்ந்தவர்கள் எங்கேனும் அவமதிக்கப்பட்டால் துடிப்பது நம் ரத்தம்.அவமதித்ததாக எழுதிய பத்திரிகை நடத்தும் கட்சியின் ஆட்சியில் தான், பா.ஜ., கட்சியினர் அடக்குமுறை செய்வதாக கூறுவது போன்ற அரசியலுக்குள் நான் செல்லவில்லை.
என்னை பற்றி சொன்னதற்காக, பதில் சொல்லி உள்ளேன் அவ்வளவு தான்.பல லட்சம் ஆசிரியர்கள், பல லட்சம் மக்கள் ஒன்றிரண்டு ஆண்டுகள் அடிப்படை பணிகளை செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை. அதில், குறைபாடு இருந்தால் சுட்டிக்காட்டலாம்
.ஒட்டுமொத்த மாணவர்களையும், அகில இந்திய தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள் என்பது தான் புதிய கல்விக் கொள்கை.இதை மறுப்பவர்கள், எதனால் மறுக்கிறேன் என்று சொல்ல வேண்டும். அதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் ஏற்றுக் கொள்வர்.அதில் சிக்கல்கள் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்.
மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் கூட, இதை ஏற்று தேர்வு எழுத தயாராக இருக்கின்றனர்.உங்களை போல் எல்லாரையும் நினைத்துக் கொண்டால், நாங்கள் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X