பெரிய தொழிற்சாலைகளுக்கான உச்ச மின் தேவை நேரம் மாற்றம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை : மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, பெரிய தொழிற்சாலை உள்ளடக்கிய உயரழுத்த இணைப்புகளில், காலை மற்றும் மாலையில்உச்சபட்ச மின் தேவை தொடர்பான நேரம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.உயரழுத்த பிரிவின் கீழ் பெரிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, ரயில்வே என, 10 ஆயிரத்து 400 மின் இணைப்புகள் உள்ளன.தினசரி மொத்த மின் பயன்பாட்டில் உயரழுத்த பிரிவின் பங்கு 40 சதவீதம்.



சென்னை : மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, பெரிய தொழிற்சாலை உள்ளடக்கிய உயரழுத்த இணைப்புகளில், காலை மற்றும் மாலையில்உச்சபட்ச மின் தேவை தொடர்பான நேரம் மாற்றி அமைக்கப்பட்டுவருகிறது.

உயரழுத்த பிரிவின் கீழ் பெரிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்கா, ரயில்வே என, 10 ஆயிரத்து 400 மின் இணைப்புகள் உள்ளன.தினசரி மொத்த மின் பயன்பாட்டில் உயரழுத்த பிரிவின் பங்கு 40 சதவீதம். இதனால் அந்த பிரிவுக்கு மட்டும் தினமும் ஐந்து விதமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதில் காலை 6:00 மணி முதல் 9:00 மணிவரை; மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, உச்ச மின் தேவை நேரமாக கருதப்படுகிறது.
இதுவரை உயரழுத்த பிரிவுக்கு ஒரு யூனிட், 6.35 ரூபாய் கட்டணம் என்றாலும், உச்ச நேரத்தில் மட்டும் கூடுதலாக, 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.தற்போது, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, மின் கட்டணங்களும், உச்ச நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உச்ச நேரம் காலை, 6:00 மணி முதல் 10:00 மணி வரையும்; மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் என, இரண்டு பிரிவுகளிலும் கூடுதலாக தலா ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், தினமும் ஆறு மணி நேரமாக இருந்த உச்ச நேரம் தற்போது, எட்டு மணி நேரமாகஉயர்ந்துள்ளது.
புதிய கட்டண விகிதத்தின்படி, உயரழுத்த பிரிவில் பெரிய தொழிற்சாலைகளுக்கு, 6.75 ரூபாயாகவும்; மருத்துவமனைகள், ரயில்வேக்கு யூனிட், 7 ரூபாயாகவும்; வணிக வளாகங்களுக்கு யூனிட், 8 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.இதனுடன், உச்ச நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கூடுதல் கட்டணம் 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து உயரழுத்த மின் இணைப்புகளில், புதிய கட்டணத்தை வசூலிக்கும் வகையில், தானியங்கி மீட்டர்களில் மென்பொருளை மாற்றி அமைக்குமாறு, உதவி செயற் பொறியாளர்களுக்கு மின் வாரியம்உத்தரவிட்டுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X