பழையபாளையம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்| Dinamalar

பழையபாளையம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்

Added : செப் 13, 2022 | |
சேந்தமங்கலம் அடுத்த பழையபாளையம் ஏரி நிரம்பி. நீளகடக்கால் வழியாக உபரி நீர் வெளியேறுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கொல்லிமலை, காரவள்ளி, சேந்தமங்கலம், முத்துகாபட்டி, புதுக்கோம்பை, பெரியசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொல்லிமலை அடிவாரம் நக்காறு, பெரியாறு, கருவாட்டாறு, சின்னக்குளம், பெரியகுளம், குண்டுமதகு,

சேந்தமங்கலம் அடுத்த பழையபாளையம் ஏரி நிரம்பி. நீளகடக்கால் வழியாக உபரி நீர் வெளியேறுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொல்லிமலை, காரவள்ளி, சேந்தமங்கலம், முத்துகாபட்டி, புதுக்கோம்பை, பெரியசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொல்லிமலை அடிவாரம் நக்காறு, பெரியாறு, கருவாட்டாறு, சின்னக்குளம், பெரியகுளம், குண்டுமதகு, வெண்டாங்கி, பொம்மசமுத்திரம் ஏரி, சிவநாயக்கன்பட்டி குளம் உள்ளிட்ட குளங்கள், ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறி, பழையபாளையம் ஏரிக்கு சென்றது. இதனால் பழையபாளையம் ஏரியும் நிரம்பி, நீள கடக்கால் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. இந்த உபரி நீர், 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள துாசூர் ஏரியை சென்றடைகிறது. பழையபாளையம் ஏரி நிரம்பி நீளகடக்கால் வழியாக உபரி நீர் வெளியேறியதால், அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து, விவசாய நிலங்களில் பயிர்கள் செழிப்பாக உள்ளதாக, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X