அமிர்த பெருவிழா பேச்சுப்போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Added : செப் 13, 2022 | |
Advertisement
அமிர்தப் பெருவிழாவில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்னையில் உள்ள இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத்தின், தமிழகம், புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், இந்திய சுதந்திரத்தின், 75ம் ஆண்டு, அமிர்தப் பெருவிழா கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடக்கிறது.

அமிர்தப் பெருவிழாவில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத்தின், தமிழகம், புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், இந்திய சுதந்திரத்தின், 75ம் ஆண்டு, அமிர்தப் பெருவிழா கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடக்கிறது. நான்காம் நாளான நேற்று, பள்ளி மாணவ, மாணவியருக்கான, மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடந்தது. 'பெண்களும் சாதிப்பார்கள்; 75 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றம்' என்ற தலைப்பில் நடந்த
இப்போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்தார். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் கந்தசாமி, சந்திரசேகரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில், உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண் முதல் பரிசும், புதுச்சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தீபிகா, இரண்டாம் பரிசும், திருமலைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி லோகேஸ்வரி மூன்றாம் பரிசும் பெற்றனர். கொல்லிமலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா ஆகியோர், ஆறுதல் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு இன்று நடக்கும் நிறைவு விழாவில் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X