காவிரி பாலத்தில் மின் விளக்குகள் சீரமைக்கப்படுமா?

Added : செப் 13, 2022 | |
Advertisement
குளித்தலை - முசிறி இடையே உள்ள காவிரி பாலத்தில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், துறையூர், பெரம்பலுார், மணப்பாறை ஆகிய முக்கிய ஊர்களை இணைக்கும் பாலமாக குளித்தலை - முசிறி தந்தை பெரியார் காவிரி பாலம் உள்ளது. குளித்தலை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தின்

குளித்தலை - முசிறி இடையே உள்ள காவிரி பாலத்தில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன
ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், துறையூர், பெரம்பலுார், மணப்பாறை ஆகிய முக்கிய ஊர்களை இணைக்கும் பாலமாக குளித்தலை - முசிறி தந்தை பெரியார் காவிரி பாலம் உள்ளது. குளித்தலை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ‍சென்று வருகின்றன. மேலும் குளித்தலை, முசிறி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமானோர் இந்த பாலத்தின் வழி‍யே பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இது தவிர, குளித்தலை, முசிறி பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் பாலத்தில் நடைபயிற்சியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இந்த வழியே செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலம் இருளில் மூழ்கி உள்ளதால் இரவு நேரத்தில் வழிப்பறிக் கொள்ளை, வேறு குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க, பாலத்தில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை உடனடியாக சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக
ஆர்வலர்கள் ‍கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X