செய்திகள் சில வரிகளில் சேலம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
100 நாள் வேலை திட்டம்2 ஆண்டாக நிறுத்தம்சேலம்: தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் பலர், ஒருசேர திரண்டு, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: மத்திய அரசின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த, 400 பெண்கள் பயன் அடைந்து வந்தோம். 2 ஆண்டாக வேலை வழங்காமல், நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், கூலிவேலையை நம்பியிருந்த எங்களின் வாழ்வாதாரம்


100 நாள் வேலை திட்டம்
2 ஆண்டாக நிறுத்தம்
சேலம்: தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பெண்கள் பலர், ஒருசேர திரண்டு, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
மத்திய அரசின் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த, 400 பெண்கள் பயன் அடைந்து வந்தோம். 2 ஆண்டாக வேலை வழங்காமல், நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், கூலிவேலையை நம்பியிருந்த எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் குடும்ப நலன் கருதி, மீண்டும், 100 நாள் வேலை வழங்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட
வேண்டும்.

சேலத்தில் நடந்த விபத்தில்
மதுரை லாரி டிரைவர் பலி
சேலம், செப். 13-
மதுரை மாவட்டம் வயலுார் அருகே உள்ள வள்ளல்குளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் தெய்வம்,40. இவர், சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் லாரி சர்வீஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அம்மாபேட்டையில் இருந்து துாத்துக்குடிக்கு துணி பண்டல்களை லாரியில் ஏற்றிக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு சென்றார்.
சீலநாயக்கன்பட்டியில் இரவு டிபன் சாப்பிடுவதற்காக, லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு நாமக்கல் பைபாஸ் சாலையை கடந்துள்ளார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரி டிரைவர் தெய்வம் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், தஞ்சாவூர், மேல வீதியை சேர்ந்த கோபான்,52, என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் பூ வியாபாரி வீட்டு
பூட்டை உடைத்து திருட்டு
சேலம், செப். 13-
சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் மனைவி லதா,45; பூ வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு குடங்களுடன் அருகில் உள்ள பைப்புக்கு தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.
தண்ணீர் குடங்களுடன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டுக்களை உடைத்து, பீரோவில் இருந்த, ஆறு பவுன் செயின், 80 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் படி, போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியிடம் சில்மிஷம்;
62 வயது பெரிசு கைது
ஓமலுார்: சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது
செய்தனர்.
தொளசம்பட்டி அருகே, மானாத்தாள், ஓலைப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூனன், 62; ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவர், 11 வயது சிறுமியிடம், நுாறு ரூபாய் கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, ஓமலுார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில், அவரை நேற்று கைது செய்து, சிறையில்
அடைத்தனர்.
பால் வேன் மோதியதில்
3 மாத கர்ப்பிணி பலி
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, பால் ஏற்றிச்சென்ற வேன் மோதியதில், மூன்று மாத கர்ப்பிணி பலியானார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா, 26; தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர். இவரின் மனைவி சினேகா, 23; ஓராண்டுக்கு முன் திருமணமான நிலையில், சினேகா மூன்று மாத கர்ப்பிணியாக
இருந்தார்.
பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு, 9:30 மணியளவில், சாலையோரம் நடந்து சென்றார். அப்போது வீரகனுாரில் இருந்து, கெங்கவல்லி வழியாக சேலத்துக்கு பால் ஏற்றிச் சென்ற 'பொலிரோ' பிக்கப் வேன், சினேகா மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்தில் பலியானார். விபத்தை ஏற்படுத்திய, நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த, வேன் டிரைவர் சங்கர், 32, என்பவரை மக்கள் மடக்கிப்பிடித்து, கெங்கவல்லி போலீசில் ஒப்படைத்தனர்.
ரேஷன் கடை, நடுநிலைப்பள்ளி
அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
சேலம்: தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில பொருளாளர் ஜெயபிரகாஷ் தலைமையில், நிர்வாகிகள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு: சேலம், போடிநாயக்கன்பட்டி ஏரிக்கரை பகுதியில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடத்தை, மழலையர் பள்ளி, சமுதாய கூடம் போன்ற மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், அங்குள்ள, 7,000 சதுரடி அரசு புறம்போக்கு நிலத்தில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, நடுநிலைப்பள்ளி அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன்கடை போன்ற, முக்கிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அரசின் பிற துறைக்கு இடத்தை ஒதுக்கீடு செய்ய, ஊர்மக்கள் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறோம். எனவே, மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
தமிழ் புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்
சேலம்: நாட்டாண்மை கழக கட்டடம் முன், தமிழ் புலிகள் கட்சி சார்பில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. குஜராத்தில், கர்ப்பிணி பெண் பில்கிஸ்பானு வன்கொடுமை வழக்கில், ஆயுள் தண்டனை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் உதயபிரகாஷ் தலைமை வகித்தார். குஜராத் அரசை கண்டித்து கோஷமிட்டனர். வழக்கில், மீண்டும் மறு விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தினர். இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணாதுரை பிறந்த நாள்
சேலம்: மத்திய மாவட்ட தி.மு.க., செயலர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், செப்.,15ல், அண்ணாதுரை பிறந்தாள் விழா நடக்கிறது. அன்று, காலை, 8:00 மணிக்கு, சேலம், பழையபஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படுகிறது. எனவே, மத்தி மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாநில அளவிலான பல்வேறு அணியினர், பகுதி, ஒன்றிய, பேரூர், கோட்ட செயலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து அணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியினர் என, அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
குறைதீர் கூட்டத்தில் 264 மனு
சேலம்: கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று, நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து மனுக்கள் பெற்றார். வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் என, பல்வேறு உதவி கேட்டு, 255 பேர், மனு அளித்தனர். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில், 9 மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம், 264 மனுக்கள் தனித்தனியே பிரித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து, மனு மீது, மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
பஞ்., அலுவலகத்தை
இடம் மாற்ற எதிர்ப்பு
சேலம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பஞ்., பொதுமக்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு: பஞ்., க்கு உட்பட்ட தர்மராஜர் திரவுபதியம்மன் கோவில், ஊராட்சி தொடக்கப்பள்ளி, வி.ஏ.ஒ., அலுவலகம், குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்துக்கு செல்லும் பிரதான பாதையையொட்டி, பஞ்., அலுவலகம் கட்ட, சமீபத்தில், பூமிபூஜை நடந்தது.
அதனால், 15 அடி அகல பாதை, 10 அடிக்கும் கீழாக குறைந்துவிடும். அங்கு, கோவில் திருவிழா நடத்துவது உள்பட வழித்தட நெரிசல் ஏற்பட்டு பிரச்னை வரும். எனவே, தற்போதுள்ள பஞ்., அலுவலகத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் மீண்டும், புது அலுவலகம் கட்டி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். எக்காரணம் கொண்டும், புதிய இடத்துக்கு, பஞ்., அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது.--
பெட்ரோல் பங்க் நிறுவ
மக்கள் கடும் எதிர்ப்பு
சேலம்: காடையாம்பட்டி அடுத்த முள்ளி செட்டிப்பட்டி மக்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் கிராமத்தையொட்டி, தனியாருக்கு சொந்தமான நிலத்தில், பெட்ரோல் பங்க் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் வந்தால், அப்பகுதியில் கோவில் திருவிழா, பண்டிகை நடத்துவதில் பல இடையூறுகள் வரும். எனவே, எங்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பைக்கில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
பனமரத்துப்பட்டி, செப். 13-
பனமரத்துப்பட்டி அடுத்த,
அடிமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலன்,55. அவர், நேற்று காலை டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் பனமரத்துப்பட்டி நோக்கி சென்றார்.
காலை, 10:30 மணிக்கு திப்பம்பட்டி அருகே வந்த போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பைக்கில் இருந்து தவறி விழுந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்து குறித்து, பனமரத்துப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.
கோரிக்கை அட்டை அணிந்து
அரசு மருத்துவர்கள் பணி
சேலம், செப். 13-
அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வரும் 25ல், சென்னையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதையொட்டி, தமிழகம் முழுவதும், அரசு மருத்துவர்கள் அனைவரும், நேற்று முதல், 4 அம்ச கோரிக்கை அட்டை அணிந்து, பணியில் ஈடுபட்டனர்.
சேலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஒட்டுமொத்த மருத்துவர்களும், கோரிக்கை அட்டையுடன் பணியில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, கால சார்ந்த பதவி உயர்வு வழங்குதல், பட்ட மேற்படிப்புக்கான தொகையை உயர்த்துதல், சேம நலநிதியை துரிதமாக வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் கூடுதல் பணி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என, நான்கு கோரிக்கையை நிறைவேற்றும்படி
வலியுறுத்தினர்.
மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என, 'பாக்டா' சார்பில், பணியில் ஈடுபட்ட 750க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், கோரிக்கை அட்டையுடன் பணியாற்றினர்.
மூதாட்டி வீட்டு பூட்டை உடைத்து நகை திருட்டு
சேலம், செப். 13-
சேலம், பெரமனுார், கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாக்கியம்,70; மகன் ஆனந்த் விஜய்,42. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
சேலத்தில் தனியாக வசித்து வந்த பாக்கியம், செப்.,1ல் வீட்டை பூட்டி விட்டு கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, வீட்டின் முன்புற கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இரண்டு மரக்கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
அஸ்தம்பட்டி போலீசார் வீட்டுக்குள் சென்று ஆய்வு செய்ததில், பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
கோவையில் உள்ள பாக்கியத்துக்கு தகவல் அளித்தனர். அவர் வந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த, 50 பவுன் நகையில், 8.4 பவுன் நகை மட்டுமே திருடப்பட்டு இருப்பதாக, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்கள் தங்களின் கை ரேகை பதிவுகளை அழித்துள்ளனர். இந்த திருட்டை பழைய குற்றவாளிகளே அரங்கேற்றி இருக்க கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X