தனியார் நிறுவனத்தில் ரூ.6.91 லட்சம் திருட்டு

Added : செப் 13, 2022 | |
Advertisement
ஓசூர்: ஓசூரில், தனியார் நிறுவன ஜன்னல் கம்பிகளை துண்டித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 6.91 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடியில், 'இன்ஸ்டாகார்ட் சர்வீஸ்' என்ற பெயரில், 'பிளிப்கார்ட்' நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் நிறுவனம் இயங்குகிறது. இங்கு, ஓசூர் மூக்கண்டப்பள்ளியை


ஓசூர்: ஓசூரில், தனியார் நிறுவன ஜன்னல் கம்பிகளை துண்டித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 6.91 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடியில், 'இன்ஸ்டாகார்ட் சர்வீஸ்' என்ற பெயரில், 'பிளிப்கார்ட்' நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் நிறுவனம் இயங்குகிறது. இங்கு, ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ், 35, என்பவர் மேலாளராக உள்ளார். மொத்தம், 27 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த, 9 முதல், நேற்று முன்தினம் வரை டெலிவரியான பொருட்களுக்கு உண்டான, 6 லட்சத்து, 91 ஆயிரத்து, 73 ரூபாயை, நிறுவனத்திலுள்ள இரும்பு பெட்டியில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தின் ஜன்னலில் இருந்த, ஐந்து இரும்பு கம்பிகளை மிஷின் மூலம் துண்டித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், இரும்பு பெட்டியி
லிருந்த பணத்தை திருடிச் சென்றனர். நேற்று காலை நிறுவனத்திற்கு வந்த மேலாளர் ராஜேஷ், இதையறிந்து, மத்திகிரி போலீசில் புகார்
செய்தார்.
நிறுவனத்தின் உட்புறமாக, 5 'சிசிடிவி' கேமராக்களும், வெளிப்புறத்தில் மூன்றும் பொருத்தப்பட்டுள்ளன. அதில், மர்ம
நபர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருக்கும் என்பதால், அதன் டி.வி.ஆர்.,ஐ மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர். மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி
வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X