கோல்கட்டாவில் மம்தாவை கண்டித்து பாஜ., பேரணி; போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீச்சு

Updated : செப் 13, 2022 | Added : செப் 13, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க தலைமை செயலகம் நோக்கி பா.ஜ.,வினர் பேரணியாக சென்றனர். கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறி தலைமை செயலகம் நோக்கி பா.ஜ.,வினர் பேரணியாக சென்றனர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, லோக்சபா எம்.பி.,
மம்தா பானர்ஜி,சுவேந்து அதிகாரி, Mamata Banerjee, Suvendu Adhikari, BJP, மேற்கு வங்கம், பாஜ, திரிணமுல் காங்கிரஸ், மம்தா, West Bengal, Trinamool Congress, Mamata,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மேற்கு வங்க தலைமை செயலகம் நோக்கி பா.ஜ.,வினர் பேரணியாக சென்றனர். கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.


latest tamil newsதிரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறி தலைமை செயலகம் நோக்கி பா.ஜ.,வினர் பேரணியாக சென்றனர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, லோக்சபா எம்.பி., லாக்கெட் சாட்டர்ஜி, தேசிய துணைத்தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.


latest tamil news


Advertisement


இந்த பேரணியை சுவேந்து அதிகாரி சந்தீப் சன்டிரகச்சி பகுதியில் இருந்தும், திலீப் கோஷ் கோல்கட்டாவின் வடக்கு பகுதியில் இருந்தும் பேரணியாக சென்றனர்.இந்த பேரணியை தடுப்பதற்காக, பாஜ.,வினர் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


போராட்டத்தில் கட்சியினரை அழைத்து வருவதற்காக பா.ஜ., சார்பில் 7 சிறப்பு ரயில்கள் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. ரயிலில் ஏற வந்தவர்களை போலீசார் கைது செய்தாக பா.ஜ., குற்றம்சாட்டியது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் தடியடியும் நடத்தப்பட்டது.


latest tamil news


பா.ஜ., தொண்டர்களுடன் கோல்கட்டா நோக்கி வந்த பஸ் ஒன்றை, வடக்கு 24 பராகன்ஸ் மாவட்ட எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.


latest tamil news


தலைமை செயலகம் அருகே, அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை மீறி பா.ஜ.,வினர் முன்னேறினர். கூட்டத்தினரை கலைப்பதற்காக, பேரணியாக வந்தவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பின்னர் பேரணிக்கு தலைமையேற்று வந்தவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


latest tamil news


கைது செய்யப்படுவதற்கு முன்னர் சுவேந்து அதிகாரி கூறுகையில், மே.வங்கத்தை, வட கொரியாவாக மம்தா மாற்றி விட்டார். மக்களிடம் ஆதரவு இல்லாததால், மம்தா சர்வாதிகாரியாக மாறிவிட்டார். போலீசார் தங்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும். பா.ஜ., வளர்ந்து வருகிறது என்றார்.

திலீப் கோஷ் கூறுகையில், பொது மக்கள் எழுச்சியை கண்டு மம்தா அரசு பயப்படுகிறது. எங்களது போராட்டத்தை தடுப்பதற்கு மம்தா முயற்சி செய்தால், நாங்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
13-செப்-202222:06:29 IST Report Abuse
Dhurvesh இந்த அம்மா தான் இவங்களுக்கு சரி , ஸ்டாலின் இங்கும் 2 ROUND கட்டினாள் சிங்கி அடங்குவார்கள்
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
13-செப்-202221:04:36 IST Report Abuse
Narayanan Muthu .....
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-செப்-202219:34:50 IST Report Abuse
sankaseshan வங்காளத்தில் இருந்த தேச பக்தர்களையும் ஆன்மிக வாதிகளையும் கேவல ப்படுத்தியவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X