குடிநீர் பணிகளுக்கு கோர்ட் தடை கூடாதுமத்திய அரசுக்கு நேரு வேண்டுகோள்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை:''அம்ருத் - 2 திட்டப் பணிகளை நிறைவேற்ற, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். நீரேற்று பாசன திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு அமைச்சர் நேரு வேண்டுகோள் விடுத்தார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் மேலாண்மை தொடர்பான, தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
குடிநீர் பணிகளுக்கு கோர்ட் தடை கூடாதுமத்திய அரசுக்கு நேரு வேண்டுகோள்

சென்னை:''அம்ருத் - 2 திட்டப் பணிகளை நிறைவேற்ற, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். நீரேற்று பாசன திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்,'' என, மத்திய அரசுக்கு அமைச்சர் நேரு வேண்டுகோள் விடுத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் மேலாண்மை தொடர்பான, தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேசியதாவது: 'அம்ருத்' திட்டத்தை, டிசம்பருக்குள் முடிக்க, மத்திய அரசு உத்தரவிடுகிறது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கக் கூடாது என, மத்திய அரசு சட்டம் போட வேண்டும்.

மத்திய அரசு வழங்க வேண்டிய அனுமதியை, உடனடியாக வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், நாங்கள் விரைவாக பணியை முடித்து விடுவோம்.அம்ருத் திட்டத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகின்றனர். இப்பணிகளை முடிக்க, மத்திய அரசு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதேபோல், மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்திற்கு, கூடுதல் கால அவகாசம் வழங்கினால், இல்லம்தோறும் குடிநீர் வழங்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்போம்.

காவிரியில் மட்டும் 300 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்துள்ளது. தமிழகத்தில் பாலாறு, தென்பெண்ணையாறு, தாமிரபரணி, வைகை ஆற்று நீர் வீணாவதை தடுத்து, புதிய திட்டத்தை செயல்படுத்த, 'அம்ருத்' திட்டத்தில், மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். நீரேற்று பாசன திட்டத்துக்கு நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:எந்த வேலை செய்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும். திட்டமிட்டு பணி செய்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியும். ஜல் ஜீவன் திட்டத்தில், தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணி நடக்க உள்ளது.

இதுவரை 10 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டு, பணி செயல்பாட்டில் உள்ளது. விரைவில் 10 ஆயிரம்முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அனுமதி வர உள்ளது. 'அம்ருத்' திட்டத்தில் ஏற்கனவே, 17 ஆயிரம் கோடி ரூபாய் பணிகள் நடக்கின்றன. அடுத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள், குடிநீர் பணிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

'சுத்தமான குடிநீர் வழங்குவதே முக்கியம்!'

மத்திய அரசின் 'அம்ருத்' திட்ட இயக்குனர் தாரா பேசியதாவது:தமிழகம் தண்ணீர் பாதுகாப்பை நோக்கி செல்கிறது. தற்போது, 114 சிறிய நகரங்களில், 24 மணி நேரம் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கிறது. வளர்ந்த நாடுகளில் கழிப்பறையில் வரும் தண்ணீரை கூட குடிக்க முடியும். நம் நாட்டில் முடியாது; அந்த நிலை மாற வேண்டும்.

வெளிநாடுகளில் நீர்நிலைகள் கறுப்பாக இருக்காது; நீல நிறமாக இருக்கும். நம் ஊரில் மட்டும் கறுப்பாக உள்ளது. அதை மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. குடிநீர் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் சேர வேண்டும். ஏழ்மையை அகற்றுவது என்பது, பணம் கொடுப்பதாலோ, நலத் திட்டங்கள் வழங்குவதாலோ முடியாது. சுத்தமான குடிநீர் வழங்கினால், மருத்துவ செலவு குறையும். அதுதான் முக்கியம். அதை நோக்கி தமிழகம் செல்கிறது.

அனைவரும் ஒருங்கிணைந்து சேவையாக நினைத்து பணியாற்றினால், தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும். நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தால்தான் வாழ முடியும். தண்ணீர், பசுமை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில் நகரமாக இருந்தாலும், வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும். இவ்வாறு அவர் பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X