மரக் கன்றுகள் வளர்ப்பு திட்டம் 'பிளாஸ்டிக்' பயன்பாடு தவிர்க்கப்படுமா?

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை:பசுமை தமிழகம் இயக்கத்துக்காக, புதிய மரக்கன்றுகள் வளர்ப்பதில் 'பிளாஸ்டிக்' பைகள் பயன்பாட்டை தவிர்க்க, வனத்துறை தயக்கம் காட்டுகிறது.தமிழகத்தின் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்துவதற்கான இயக்கத்தை, அரசு அறிவித்து உள்ளது. இத்திட்டத்தில், தமிழகம் முழுதும் 260 கோடி மரக்கன்றுகளை நடும் பணிகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது.தமிழகம் முழுதும் 280 இடங்களில், மரக்கன்றுகளை

சென்னை:பசுமை தமிழகம் இயக்கத்துக்காக, புதிய மரக்கன்றுகள் வளர்ப்பதில் 'பிளாஸ்டிக்' பைகள் பயன்பாட்டை தவிர்க்க, வனத்துறை தயக்கம் காட்டுகிறது.

தமிழகத்தின் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்துவதற்கான இயக்கத்தை, அரசு அறிவித்து உள்ளது. இத்திட்டத்தில், தமிழகம் முழுதும் 260 கோடி மரக்கன்றுகளை நடும் பணிகளை வனத்துறை முடுக்கி விட்டுள்ளது.

தமிழகம் முழுதும் 280 இடங்களில், மரக்கன்றுகளை வளர்க்கும் பணிகள்நடந்து வருகின்றன. இதில்,மரக்கன்றுகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளில் தான் வளர்க்கப்படுகின்றன.

இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:லாரிகள், வேன்கள் வாயிலாக பல்வேறு இடங்களுக்கு, இக்கன்றுகள் எடுத்துச் செல்லப்பட்டு நடப்படுகின்றன. மரக்கன்றுகளை நடும்போது, அதன் அடிபாகத்தில் உள்ள பிளாஸ்டிக் பைகள் நீக்கப்படுகின்றன.நீக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால், அதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று வழிமுறைகளை, வனத்துறை பரிந்துரைத்துள்ளது.

இதனால் சணல் பைகள், தேங்காய் நார் பைகள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் மரக்கன்றுகளை வளர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வகை மாற்று பைகளை பயன்படுத்துவது நல்லது தான் என்றாலும், அதற்கான செலவு அதிகம்.இதனால் ஏற்படும் கூடுதல் செலவுகளுக்கு, வனத்துறை ஒப்புதல் அளிக்க தயக்கம் காட்டுவதால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X