அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை: கேரள கவர்னர்

Added : செப் 13, 2022 | |
Advertisement
பாலக்காடு:''அரசுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை,'' என, கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார்.பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில், 'தம்பு', 'ஏக்தா பரிஷத்' ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து, கேரள ஆதிவாசிகள் மாநாடு நடத்தியது. கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மாநாட்டை துவக்கி வைத்து கூறியதாவது: திருவனந்தபுரத்தில் நடந்த ஓணம் பண்டிகையின் இறுதி விழாவில், அரசு
அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை: கேரள கவர்னர்

பாலக்காடு:''அரசுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை,'' என, கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார்.

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில், 'தம்பு', 'ஏக்தா பரிஷத்' ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து, கேரள ஆதிவாசிகள் மாநாடு நடத்தியது. கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மாநாட்டை துவக்கி வைத்து கூறியதாவது:

திருவனந்தபுரத்தில் நடந்த ஓணம் பண்டிகையின் இறுதி விழாவில், அரசு அழைக்காமல் இருந்ததால் அட்டப்பாடிக்கு வந்ததாக உலவும் தகவல் தவறானது. இந்த மாநாட்டில் பங்கேற்க, எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுக்கப்பட்டது. அதை நான் உடனடியாக ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, அரசுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்ற நஞ்சியம்மாவை, கவர்னர் கவுரவித்தார். ஆதிவாசி மேம்பாடு திட்ட அறிக்கையை சொரியன் மூப்பன், மாங்குல மூப்பன், குடியண்ணன் மூப்பன் ஆகியோர் கவர்னரிடம் சமர்ப்பித்தனர்.

தேசிய நிலச்சீர்திருத்த குழு உறுப்பினர் ராஜகோபால் தலைமை வகித்தார். தம்பு தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் ராமு, ஏக்தா பரிஷத் தலைவர் சந்தோஷ், போளன், லட்சுமி உன்னி கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X