பழுதடைந்த கட்டடத்தால் நோயாளிகள் அச்சம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருவாலங்காடு:திருவாலங்காடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் உள்ள பழுதடைந்த கட்டடத்தால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.திருவாலங்காடில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.இங்கு சிகிச்சைக்காக தினமும் 150க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்த வளாகத்தில் பழைய பி.டி.ஓ.,
பழுதடைந்த கட்டடத்தால் நோயாளிகள் அச்சம்

திருவாலங்காடு:திருவாலங்காடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் உள்ள பழுதடைந்த கட்டடத்தால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாலங்காடில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.இங்கு சிகிச்சைக்காக தினமும் 150க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்த வளாகத்தில் பழைய பி.டி.ஓ., அலுவலக கட்டடம் மற்றும் அரசு சிமென்ட், சத்துணவு முட்டை வைக்கும் குடோன்கள் உட்பட நான்கு கட்டடங்கள் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் உள்ளது.

இந்த கட்டடங்கள் அனைத்தும், 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. எனவே தற்போது சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும், கூரை பெயர்ந்தும், விரிசல் விட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பழுதடைந்த கட்டடத்தால் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில், பழுதடைந்த கட்டடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X