சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'என்ன பஞ்சாயத்து தெரியலையே!'

Added : செப் 13, 2022 | |
Advertisement
'என்ன பஞ்சாயத்து தெரியலையே!'சேலம் மாவட்டம், பெரமனுாரில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நடவடிக்கை, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடல், வன்னியருக்கு இட ஒதுக்கீடு, எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை, தேர்தல்
பக்க வாத்தியம்


'என்ன பஞ்சாயத்து தெரியலையே!'



சேலம் மாவட்டம், பெரமனுாரில் நடந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நடவடிக்கை, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடல், வன்னியருக்கு இட ஒதுக்கீடு, எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடல் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை, தேர்தல் நேரத்தில் தி.மு.க., கொடுத்தது.
'அந்த வாக்குறுதி புத்தகத்தை வைத்துக் கொண்டு, மேடைதோறும் பிரசாரம் செய்தேன். வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றேன். அதற்காக, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, குரல் கொடுக்காமல் இருக்க முடியாது' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., கூட்டணியில், சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, 'காம்ரேட்'களே கம்முன்னு இருக்கும் போது, உதயசூரியனை, 'ஓசி' வாங்கி ஜெயிச்ச இவரு ஏன் கூவுறாரு... என்ன பஞ்சாயத்துன்னு தெரியலையே...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X