சிவப்பு நிற ஆவின் பால் விற்பனை என்னாச்சு?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

சிவப்பு நிற ஆவின் பால் விற்பனை என்னாச்சு?

Added : செப் 13, 2022 | |
சிவப்பு நிற ஆவின் பால் விற்பனை என்னாச்சு?''புரமோஷனுக்கு கடும் போட்டி நடக்குல்லா...'' என, பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, மேட்டரை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''பள்ளிக்கல்வித் துறையில, முதன்மை கல்வி அலுவலரான, சி.இ.ஓ., மற்றும் மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., பதவிகளை, பதவி உயர்வுல நிரப்புதாவ... இதுல, டி.இ.ஓ., பதவிகள் மட்டும், 50

டீ கடை பெஞ்ச்


சிவப்பு நிற ஆவின் பால் விற்பனை என்னாச்சு?''புரமோஷனுக்கு கடும் போட்டி நடக்குல்லா...'' என, பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, மேட்டரை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''பள்ளிக்கல்வித் துறையில, முதன்மை கல்வி அலுவலரான, சி.இ.ஓ., மற்றும் மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., பதவிகளை, பதவி உயர்வுல நிரப்புதாவ... இதுல, டி.இ.ஓ., பதவிகள் மட்டும், 50
சதவீதம் நேரடியாகவும், 50 சதவீதம் பதவி உயர்வுலயும் நிரப்புதாவ வே...

''செங்கல்பட்டு, அரியலுார், நாகை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், தஞ்சை சரஸ்வதி மஹால்ல, ரெண்டு மாசத்துக்கும் மேலா சி.இ.ஓ., பணியிடம் காலியா இருக்கு... அதே போல, 20 டி.இ.ஓ., பதவிகளும் காலியா கிடக்கு வே...

''பதவி உயர்வு மூலமா இவற்றை நிரப்பணும்... ஆனா, பதவி உயர்வுக்கான விதிமுறைகளை மாத்த, கமிஷனர் நந்தகுமாரும், செயலர் காகர்லா உஷாவும் முடிவு பண்ணியிருக்காவ...

''இதுக்கு இடையில, இந்தப் பதவிகளை பிடிக்க பலரும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி புள்ளிகள் சிபாரிசோட துறை அலுவலகத்தை சுத்தி சுத்தி வர்றாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஜனநாயகமே இல்லன்னு புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர தி.மு.க.,வுக்கு, சமீபத்துல நிர்வாகிகள் தேர்தல் நடந்துச்சு... கிளை செயலர் உட்பட பலரும் ஒருத்தர் பெயரை சிபாரிசு பண்ணி, அவருக்கே நகரச் செயலர் பதவி குடுத்துடலாம்னு சொல்லியிருக்காங்க பா...

''தேர்தலை நடத்த வந்த தி.மு.க., பிரமுகரும், 'இவருக்கே பதவி வழங்க சிபாரிசு செய்றோம்'னு கடிதமே குடுத்துட்டு போயிருக்காங்க... ஆனா, தலைமையில இருந்து வெளியான அறிவிப்புல, வேற ஒருத்தர் பெயர் வந்துடுச்சு பா...

''இதனால, கட்சியினர் நொந்து போயிட்டாங்க... 'ஜனநாயகப்படி பெரும்பான்மையினர் கருத்தை ஏத்துக்காம பதவிகளை குடுக்கிறாங்க... பெரும்பாலும், குறிப்பிட்ட சமுதாயத்துக்கே பதவி வழங்கப்படுது'ன்னு குமுறிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.தெருவில், கிரிக்கெட் பேட்டுடன் சென்ற இரு வாலிபர்களில் ஒருவர், 'அமுதபாரதி சிக்சர் அடிப்பாருன்னு நினைச்சேன்... ஆனா, நவநீதகிருஷ்ணன் கேட்ச் பிடிச்சு கெடுத்துட்டாருடா...' என்றபடியே நடக்க, அவர்களை பார்த்து சிரித்த குப்பண்ணா,

''சிவப்பு நிற பால் பாக்கெட் விக்கறதுல மந்தமா செயல்படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''ஆவின் தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஆமாம்... ஹோட்டல்கள், டீ கடைகள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, 'டீ மேட்' என்ற பெயர்ல, அதிக கொழுப்பு சத்துள்ள சிவப்பு நிற பால் பாக்கெட்டை ஆவின்ல அறிமுகப்படுத்தினால்லியோ... 1 லிட்டர் 57 ரூபாய்க்கும், அரை லிட்டர் 34 ரூபாய்க்கும் வித்துண்டு இருந்தா ஓய்...

''இதே பாலை, தனியார் நிறுவனங்கள் லிட்டர், 65 ரூபாய் வரை வித்துண்டு இருந்ததால, ஆவின் பாலுக்கு, 'டிமாண்ட்' அதிகம் இருந்தது... ஆனா, இந்த பாலை ஏஜன்ட்களுக்கு வழங்கறதை படிப்படியா குறைச்சு, இப்பவே சுத்தமா
நிறுத்திண்ட்டா ஓய்...

''தனியார் பால் நிறுவனங்களுடன் கூட்டணி போட்டு, சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை ஆவின் அதிகாரிகள் சிலர் முடக்கிட்டதா புகார்கள் வரது... இதனால, ஆவினுக்கு வருவாயும் குறைஞ்சிடுத்து... 'இந்த பிரச்னையில, முதல்வர் தலையிட்டா தீர்வு கிடைக்கும்'னு ஆவின் ஊழியர்கள் சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X