டிராக்டர் மோதி முதியவர் பலி

Added : செப் 13, 2022 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கிளியாநகர் கிராமம், கீழவாடை தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 75; விவசாயி. இரு நாட்களுக்கு முன், தன் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுதர்சன், 19, என்பவர், எல்.எண்டத்துாரில் இருந்து கிளியா நகருக்கு, டிராக்டரில் அதிவேகமாக வந்துள்ளார்.வாகன டிப்பரின் கதவு, சாலையோரம் நின்ற நடராஜன் மீது மோதி, கதவின் இரும்பு கம்பி

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கிளியாநகர் கிராமம், கீழவாடை தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 75; விவசாயி. இரு நாட்களுக்கு முன், தன் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுதர்சன், 19, என்பவர், எல்.எண்டத்துாரில் இருந்து கிளியா நகருக்கு, டிராக்டரில் அதிவேகமாக வந்துள்ளார்.வாகன டிப்பரின் கதவு, சாலையோரம் நின்ற நடராஜன் மீது மோதி, கதவின் இரும்பு கம்பி அவரது புருவத்தில் குத்தி இழுத்து சென்றது.

பலத்த காயமடைந்த நடராஜன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, முதியவர் நடராஜன் இறந்தார். மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X