ஒற்றைச்சாளர முறையில் குறையும் விண்ணப்பங்கள்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை:தமிழகத்தில் தொழில் துவங்க, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கான இணையதளமும் 'அப்டேட்' ஆகாமல் முடங்கி உள்ளது.தமிழகத்தில் தொழில் துவங்க, ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும் வசதி உள்ளது. இதன் வழியாக, புதிய தொழில் துவங்குதல், ஏற்கனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துதல், தடையின்மை சான்றிதழ், அனுமதியை

சென்னை:தமிழகத்தில் தொழில் துவங்க, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கான இணையதளமும் 'அப்டேட்' ஆகாமல் முடங்கி உள்ளது.
தமிழகத்தில் தொழில் துவங்க, ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும் வசதி உள்ளது. இதன் வழியாக, புதிய தொழில் துவங்குதல், ஏற்கனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துதல், தடையின்மை சான்றிதழ், அனுமதியை புதுப்பித்தல் போன்ற, தொழில் சார்ந்த அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒற்றைச் சாளர முறை திட்டம், தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் அனுமதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. அனைத்து விபரங்களும் 'ஆன்லைனில்' பதிவு செய்து, அனுமதியும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், 3 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறது.
இந்நிலையில், ஒற்றைச் சாளர முறை இணையதளம், 2021 ஜனவரி 7க்கு பின், 'அப்டேட்' ஆகாமல் முடங்கி உள்ளது. நடப்பு ஆண்டில் விண்ணப்பித்த நிறுவனங்களின் பட்டியலில் சிப்காட் நிறுவனத்திற்கு, இதுவரை 1 விண்ணப்பம் மட்டும் கிடைத்துள்ளதாக அதன் இணையதளத்தில் காண்பிக்கிறது.இதே போல, பிற துறைகள் பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.
ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்தாலும், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளை நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் சூழல் உள்ளது. இதனால், இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான், தமிழகத்தில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் விரைவில் அனுமதி கிடைக்கும். தமிழகம் பெற்ற முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விபரங்களும், பொது மக்களுக்கு தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X