பொது பயன்பாட்டு மின் கட்டணம்அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை:அடுக்குமாடி குடியிருப்புகளில், 'மோட்டார் பம்ப், லிப்ட்' போன்ற பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள பொது மின் இணைப்பிற்கான கட்டணம், புதிய கட்டண விகிதத்திற்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது.தமிழக மின் வாரியம், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகளின் வளாகத்தில் விளக்குகள், நீச்சல்

சென்னை:அடுக்குமாடி குடியிருப்புகளில், 'மோட்டார் பம்ப், லிப்ட்' போன்ற பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள பொது மின் இணைப்பிற்கான கட்டணம், புதிய கட்டண விகிதத்திற்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது.
தமிழக மின் வாரியம், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகளின் வளாகத்தில் விளக்குகள், நீச்சல் குளம், 'லிப்ட், மோட்டார் பம்ப், சிசிடிவி கேமரா, ஜிம்' போன்றவை உள்ளன.அந்த பொது சேவைகளுக்காக தனியாக வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு, வீட்டு பிரிவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், 100 யூனிட் இலவசம், 500 யூனிட் வரை மானிய கட்டணம் ஆகிய சலுகைகள் கிடைத்தன.
இம்மாதம், 10ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி, புதிய ஆணையை வெளியிட்டு உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவைக்கான மின் பயன்பாட்டிற்கு புதிய கட்டண விகிதத்தை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 8 ரூபாயும்; நிரந்தர கட்டணமாக, மாதம் கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் இதுவரை, 1.80 லட்சம் பொது மின் இணைப்புகள் இருப்பதாக, மின் வாரியம் கண்டறிந்துள்ளது. இது தவிர, தங்கள் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று, பொது மின் இணைப்புகளை, புதிய கட்டண விகிதத்திற்கு மாற்றம் செய்து, அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X