திருத்தணி அரசு மருத்துவமனையில் 12 மணி நேரம் இயங்கும் 'சிடி ஸ்கேன்'

Added : செப் 13, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி வட்டார அரசு மருத்துவமனைக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், 120க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக வெறும், 500 ரூபாயில் 'சிடி ஸ்கேன்' எடுத்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. காலை 8:00 மணி முதல், மதியம் 1:00
திருத்தணி அரசு மருத்துவமனையில் 12 மணி நேரம் இயங்கும் 'சிடி ஸ்கேன்'

திருத்தணி:திருத்தணி வட்டார அரசு மருத்துவமனைக்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், 120க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக வெறும், 500 ரூபாயில் 'சிடி ஸ்கேன்' எடுத்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை மட்டுமே சிடி ஸ்கேன் அரசு மருத்துவ மனையில் எடுக்க முடியும்.மற்ற நேரத்தில் சிடி ஸ்கேன் எடுக்க, திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், குறைந்தபட்சம் 4,000 ரூபாய் கொடுத்து எடுத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் இளங்கோவன், காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை சிடி ஸ்கேன் எடுக்கப்படும் என அறிவித்து, நேரத்தை அதிகரித்தார். இந்நிலையில், நேற்று, சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் இளங்கோவன், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து சிடி ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சென்று, தினசரி எவ்வளவு நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது என, கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X