ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகளுக்கு தொடர்பு?

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை:அரிசி கடத்தலில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டுமின்றி, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.தமிழக ரேஷன் கடைகளில் 92 லட்சம் முன்னுரிமை அரிசி கார்டுதாரர்கள், 18.65 லட்சம் அந்தியோதயா; 1.03 கோடி முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.அரசு செலவுஅனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க, மாதம்

சென்னை:அரிசி கடத்தலில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டுமின்றி, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.தமிழக ரேஷன் கடைகளில் 92 லட்சம் முன்னுரிமை அரிசி கார்டுதாரர்கள், 18.65 லட்சம் அந்தியோதயா; 1.03 கோடி முன்னுரிமையற்ற அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.


அரசு செலவு


அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க, மாதம் சராசரியாக, 32.30 கோடி கிலோ அரிசி தேவை. இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் வரை, தமிழக அரசு செலவு செய்கிறது.பல அரிசி கார்டுதாரர்கள் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை முழுதுமாக வாங்குகின்றனர்; அரிசி வாங்குவதில்லை.
எனவே, சில கடைகளின் ஊழியர்கள், முழு அரிசியையும் வழங்கியதுபோல், விற்பனை முனைய கருவியில் பதிவு செய்கின்றனர். இது தொடர்பாக, கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., வந்தும், அவர்கள் புகார் அளிக்காமல் உள்ளனர். இதனால் ரேஷன் ஊழியர்கள், வியாபாரிகள், வட மாநிலத்தவர்களிடம் விற்பனை செய்து, பணம் சம்பாதிக்கின்றனர்.இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலில், கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.


ரகசிய விசாரணை


ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:ரேஷன் அரிசி கடத்தலில் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகளுக்கும், விற்பனை முனைய கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் வட்ட அளவில் உள்ள ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தினால், பல முறைகேடுகள் வெளிவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, கூட்டுறவுமற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகள் உட்பட, அனைத்து இடங்களிலும் உணவு வழங்கல் துறை அதிகாரிகளும், குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளும் அரிசி கடத்தல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதுடன், அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அரிசி கடத்தலில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் ரகசிய விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X