'கிங்பிஷர்' விமானம் அகற்றும் பணி மீண்டும் துவக்கம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
சென்னை, சென்னை விமான நிலையத்தில், 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'கிங்பிஷர்' விமானங்களை, அப்புறுப்படுத்தும் பணி மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது.சென்னை விமான நிலையத்தில், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பயன்படாத விமானங்களை அகற்றும் பணியை, சென்னை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இதன்படி, 2021ல் என்.இ.பி.சி., என்ற நேச்சர் எனர்ஜி பிராஸசிங் கம்பெனி
'கிங்பிஷர்' விமானம் அகற்றும் பணி மீண்டும் துவக்கம்

சென்னை, சென்னை விமான நிலையத்தில், 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'கிங்பிஷர்' விமானங்களை, அப்புறுப்படுத்தும் பணி மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது.சென்னை விமான நிலையத்தில், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பயன்படாத விமானங்களை அகற்றும் பணியை, சென்னை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இதன்படி, 2021ல் என்.இ.பி.சி., என்ற நேச்சர் எனர்ஜி பிராஸசிங் கம்பெனி விமானங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

தற்போது, கிங்பிஷர் நிறுவன விமானங்களை அகற்றும் பணி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தில், என்.இ.பி.சி., ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் ஆகிய நிறுவனங்களின், 12 பயன்படாத விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில், என்.இ.பி.சி., விமானங்கள் நான்கும், ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்றும், 2021ல் அப்புறப்படுத்தப்பட்டன.கிங்பிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏழு விமானங்களில், இரண்டை அப்புறப்படுத்தும் பணி, சில மாதங்களுக்கு முன் நடந்தது.

அதில், பயன்படுத்தும் நிலையில் இருக்கும் இன்ஜின் உட்பட தொழில்நுட்ப கருவிகள், முக்கியமான பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படலாம்.தற்போது, நான்கு விமானங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, நான்கு விமானங்களின் மதிப்புகளை கணக்கிட்ட பின், அவற்றை அப்புறப்படுத்தும் பணி துவங்கும். இந்த விமானங்களை அப்புறப்படுத்துவதன் வாயிலாக, 2012 முதல் தற்போது வரையிலான விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும். இதனால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.இது தவிர, இதர விமானங்களை நிறுத்துவற்கான கூடுதல் இட வசதியும் கிடைக்கும். பழைய விமானங்களை அகற்றுவதன் வாயிலாக, அதிலிருந்து வெளி வரும் பறவைகளால், வழக்கமான விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X