ரூ.6 லட்சம் மோசடி தாய் மகன் கைது| Dinamalar

ரூ.6 லட்சம் மோசடி தாய் மகன் கைது

Added : செப் 13, 2022 | |
ஸ்ரீபெரும்புதுா:தாம்பரம் அருகே பீர்கங்காரணை பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம், 48, இவரது மனைவி தமிழ்செல்வி, 44, மகன் சதிஷ்குமார், 20. இவர்கள், படப்பை அருகே ஆதனுார் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு குத்தகைக்கு விடுவதாக கூறி இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டனர். இதைபார்த்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ்பிரபு, 36, என்பவர் தணிகாச்சலத்தை

ஸ்ரீபெரும்புதுா:தாம்பரம் அருகே பீர்கங்காரணை பகுதியை சேர்ந்தவர் தணிகாச்சலம், 48, இவரது மனைவி தமிழ்செல்வி, 44, மகன் சதிஷ்குமார், 20. இவர்கள், படப்பை அருகே ஆதனுார் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு குத்தகைக்கு விடுவதாக கூறி இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டனர்.

இதைபார்த்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ்பிரபு, 36, என்பவர் தணிகாச்சலத்தை அணுகியுள்ளார்.இதையடுத்து லோகேஷ்பிரபுவை நேரில் வரவழைத்த தணிகாச்சலம் மற்றும் அவரது குடும்பத்தினர் குத்தகைக்கு வீடு விடுவதைப்போல் கூறி, வேறு ஒருவரது வீட்டை லோகேஷ் பிரபுவுக்கு குத்தைக்கு விட்டு 6 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லோகேஷ் பிரபு இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மோசடியில் ஈடுப்பட்ட தமிழ்செல்வி, இவரது மகன் சதிஷ்குமாரை கைது செய்தனர். தணிகாச்சலத்தை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X