முறையாக இயக்கப்படாத பஸ்! மாணவர்கள் அவதி | Dinamalar

முறையாக இயக்கப்படாத பஸ்! மாணவர்கள் அவதி

Added : செப் 13, 2022 | |
சூலுார்:வதம்பச்சேரிக்கு பஸ் முறையாக இயக்கப்படாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சூலுாரில் இருந்து வதம்பச்சேரி, நல்லுார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, '105 சி' அரசு டவுன் பஸ் கடந்த, 30 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. முதல் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ், அதன் பின்னர் முறையாக இயக்கப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து

சூலுார்:வதம்பச்சேரிக்கு பஸ் முறையாக இயக்கப்படாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சூலுாரில் இருந்து வதம்பச்சேரி, நல்லுார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, '105 சி' அரசு டவுன் பஸ் கடந்த, 30 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. முதல் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ், அதன் பின்னர் முறையாக இயக்கப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து வதம்பச்சேரி மக்கள் கூறியதாவது:ஊரடங்கின் போது நிறுத்தப்பட்ட பஸ், ஊரடங்கு முடிந்தும் முறையாக இயக்கப்படவில்லை. தினமும் ஐந்து முறை வந்து சென்ற பஸ், இரு முறைதான் இயக்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பஸ்சுக்காக காத்திருந்து வராமல் போவதால், நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில வாரங்களாக, முழுமையாக வருவதில்லை. ஏழு நாளில் ஏதாவது இரு நாட்கள் மட்டுமே வந்து செல்கிறது. இப்படி இயக்குவதால், மக்கள் பஸ்சை எதிர்பார்த்து ஒரு காரியமும் செய்ய முடியாமல் உள்ளனர். மாணவர்களும் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கு விடிவு காலமே இல்லாத நிலை உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இனி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X