மாநகராட்சி கட்டடத்தில் செழித்து வளரும் மரம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை லாரி, கழிவு நீர் அகற்றும் லாரி, பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் லாரி என, மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு வாகனங்கள் நிறுத்துவதற்கான 'ஷெட்' ஹாஸ்பிட்டல் சாலையில், மாநகராட்சி கமிஷனரின் அரசு இல்லம் எதிரில் இயங்கி வருகிறது.மாநகராட்சி வாகனம் நிறுத்தப்படும் ஷெட் வளாகத்திலேயே, மாநகராட்சி 2வது கோட்ட அலுவலகமும்
மாநகராட்சி கட்டடத்தில் செழித்து வளரும் மரம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை லாரி, கழிவு நீர் அகற்றும் லாரி, பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் லாரி என, மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு வாகனங்கள் நிறுத்துவதற்கான 'ஷெட்' ஹாஸ்பிட்டல் சாலையில், மாநகராட்சி கமிஷனரின் அரசு இல்லம் எதிரில் இயங்கி வருகிறது.

மாநகராட்சி வாகனம் நிறுத்தப்படும் ஷெட் வளாகத்திலேயே, மாநகராட்சி 2வது கோட்ட அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் நுழைவாயில் கேட் அருகில் சுற்றுச்சுவரில், அரசமரம் ஒன்று வேரூன்றி வளர்ந்துள்ளதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால், சுற்றுச்சுவர் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்லும் அதிகாரிகளின் கண்களில் மரம் வளர்ந்து இருப்பது தென்படவில்லையோ என சமூக ஆர்வலர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. சுற்றுச்சுவர் இடிந்து விழுவதற்குள் அரச மரச்செடியை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X