வட மாநிலங்களுக்கு முட்டை 'சப்ளை' கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்பு இல்லை

Added : செப் 13, 2022 | |
Advertisement
நாமக்கல்:''தரமான முட்டை என்பதால், வட மாநிலங்களுக்கு முட்டை சப்ளை துவங்கி உள்ளது. அதனால், கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்பு இல்லை,'' என, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள, 1,000 கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும், ஐந்து கோடி கோழிகள் மூலம் தினமும், 5 கோடி முட்டை உற்பத்தி

நாமக்கல்:''தரமான முட்டை என்பதால், வட மாநிலங்களுக்கு முட்டை சப்ளை துவங்கி உள்ளது. அதனால், கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்பு இல்லை,'' என, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள, 1,000 கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும், ஐந்து கோடி கோழிகள் மூலம் தினமும், 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.


பண்ணையாளர் கவலை


உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக சத்துணவு திட்டத்துக்கும், கேரளா, வட மாநிலங்கள் மற்றும் உள்ளூர் தேவைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவான, 'நெக்' நிர்ணயம் செய்யும் விலைக்கே, விற்பனை செய்ய வேண்டும்.அதன்படி, கடந்த 1ல், கொள்முதல் விலை, 420 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, 3ல், ஒரே நாளில், 50 காசு உயர்த்தப்பட்டு, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த, 8ல், 450 காசாக குறைக்கப்பட்ட நிலையில், 12ல், மேலும், 20 காசு சரிந்து, 430 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. மூன்று நாட்களில், 40 காசு குறைக்கப்பட்டதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.விரைவில், தமிழகத்தில் புரட்டாசி விரதம் கடைப்பிடிக்க துவங்குவதால், நுகர்வு சரியும் நிலை உள்ளது. அவற்றை கருதியே முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டது.ஆனால், தற்போது, வடமாநிலங்களில் தேவை அதிகரித்துள்ளதால், தமிழக முட்டைகள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


நுகர்வு சரியும்


இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில், புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் கடைப்பிடிப்பதால் நுகர்வு சரியும். அந்த நேரத்தில், கொள்முதல் விலையும் குறைக்கப்படும். 20 நாட்களாக, வட மாநிலங்களுக்கு முட்டை சப்ளை இல்லாமல் இருந்தது.
கடந்த இரண்டு நாட்களாக, 10 லோடு முட்டை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, 30 லட்சம் முட்டைகள் சென்றுள்ளன. அங்கு, கொள்முதல் விலை, 10, 15 காசு குறைவாகவே உள்ளது. எனினும், நம் முட்டை தரமானதாக இருப்பதால், அங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அதனால், தற்போது, முட்டை லோடு சென்று கொண்டிருக்கிறது. நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை, மேலும் குறைய வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X