சிவகங்கை முதியவருக்கு பன்றி காய்ச்சல்

Updated : செப் 14, 2022 | Added : செப் 13, 2022 | |
Advertisement
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் ஆண்டிச்சியூரணியை சேர்ந்த 61 வயது முதியவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இம்மாவட்டத்தில் 3ம் கட்ட அலைக்கு பின் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சராசரியாக மாதத்திற்கு 600 பேருக்கு பரிசோதனை செய்தால் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்து வரும்
சிவகங்கை, பன்றி காய்ச்சல், Sivaganga, swine fever,

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் ஆண்டிச்சியூரணியை சேர்ந்த 61 வயது முதியவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இம்மாவட்டத்தில் 3ம் கட்ட அலைக்கு பின் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சராசரியாக மாதத்திற்கு 600 பேருக்கு பரிசோதனை செய்தால் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இம்மாவட்டத்தில் புதிதாக பன்றி காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது.

செப்., 8 காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணியை சேர்ந்த முதியவர் தொடர் காய்ச்சல், மூச்சு திணறலால் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் தீராததால் ரத்த மாதிரிகளை சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் முடிவு செப்., 11 வெளியானது.

முதியவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியானது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் அறிவுறுத்தலின்படி முதியவருடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X