மேம்பாலங்களில் அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டி அத்துமீறல்

Added : செப் 13, 2022 | |
Advertisement
அதிகாரிகள் அலட்சியம்பொள்ளாச்சி, கெட்டி மல்லன்புதுாரில், அங்கன்வாடி மையம் அருகே, குப்பை குவிக்கப்பட்டு கடும் துர்நாற்றம் நிலவுகிறது. இதனால், அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு பலவித தொற்று நோய்கள் ஏற்படுகிறது. பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.- யோகேஸ்வரன், பொள்ளாச்சி.கால்வாய்கள்
மேம்பாலங்களில் அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டி அத்துமீறல்


அதிகாரிகள் அலட்சியம்



பொள்ளாச்சி, கெட்டி மல்லன்புதுாரில், அங்கன்வாடி மையம் அருகே, குப்பை குவிக்கப்பட்டு கடும் துர்நாற்றம் நிலவுகிறது. இதனால், அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு பலவித தொற்று நோய்கள் ஏற்படுகிறது. பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.- யோகேஸ்வரன், பொள்ளாச்சி.


கால்வாய்கள் துார்வாரணும்!


பொள்ளாச்சி, இந்திரா நகரில் சாக்கடை கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. சாக்கடை கால்வாய்களை முறையாக துார்வாரி, கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிரி, பொள்ளாச்சி.


குரங்குகளால் அச்சம்


வால்பாறை நகரில், துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிங்கவால் குரங்குகள் நடமாடுவதால், மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். குரங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுந்தர், வால்பாறை.


விபத்து அபாயம்


பொள்ளாச்சி, தாலுகா அலுவலக ரோட்டில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து ஸ்தம்பித்து விபத்துகள் ஏற்படுகின்றன. வெள்ளைக்கோடுகள் மற்றும் ஒளி பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும்.- விமல், பொள்ளாச்சி.


ஆபத்தான கம்பம்


பொள்ளாச்சி, மெட்டுவாவி மாரியம்மன் கோவில் அருகில், மின்கம்பம் சிதிலமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான மின் கம்பத்தை விரைவில் மாற்றியமைக்க வேண்டும்.- லட்சுமணசாமி, மெட்டுவாவி.


கோடு போடணும்!


பொள்ளாச்சி - கோவை ரோட்டில், மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து ஆச்சிபட்டி வரையில், ரோடு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வெள்ளைக்கோடு போடப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.- பிரதீப், பொள்ளாச்சி.


அத்துமீறலுக்கு அளவில்லை


பொள்ளாச்சி - கோட்டூர் ரோடு, நடுப்புணி ரோட்டிலுள்ள பாலங்களில், அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா ரசிகர் மன்றத்தினர், அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டுவதுடன், ஓவியங்கள் வரைகின்றனர். அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தரணி, பொள்ளாச்சி.


விளக்கு அமைக்கணும்


ஆனைமலை, நா.மூ.சுங்கம்., பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அகற்றப்பட்டு, பல மாதங்களாகியும் மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. இரவில் இருள் சூழ்ந்து விடுவதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.- முரளிதரன், நா.மூ.சுங்கம்.


ரோடு போடுங்க சார்!


பொள்ளாச்சி, கடைவீதி ரோடு, எஸ்.எஸ்.கோவில் ரோடுகளில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழி தோண்டப்பட்டது. திட்டப்பணி நிறைவடைந்தும், ரோடு அமைக்கப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறும் நிலை உள்ளது. ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.- மணிகண்டன், பொள்ளாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X