கோர்ட் உத்தரவு; ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : செப் 13, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:கோர்ட் உத்தரவுப்படி, பொள்ளாச்சி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில்
கோர்ட் உத்தரவு; ஆக்கிரமிப்பு அகற்றம்

பொள்ளாச்சி:கோர்ட் உத்தரவுப்படி, பொள்ளாச்சி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். உதவிக்கோட்டப்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் தினேஷ்குமார் முன்னிலையில், நேற்று தபால் அலுவலகம் முதல், நகராட்சி அலுவலகம் வரை இருந்த, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
அதிகாரிகள் கூறுகையில், 'கோர்ட் உத்தரவுப்படி, போஸ்ட் ஆபீஸ் முதல் நகராட்சி அலுவலகம் வரையிலும், பல்லடம் ரோட்டில், தேர்நிலையம் முதல், டி.கோட்டாம்பட்டி வரையிலும், மீன்கரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன,' என்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'பெயரளவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றாமல், முழுமையாக அகற்ற வேண்டும். நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், பொதுமக்களுக்கு நிம்மதியாக நடந்து செல்லமுடியும்.ஆக்கிரமிப்பு அகற்றுவதும், அவை மீண்டும் வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X