ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா இல்லை: பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி

Added : செப் 13, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டு, 2014ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. அதன்பின், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், மூன்று பயணியர் ரயில்கள் இயங்கின.தற்போது, சென்னை எக்ஸ்பிரஸ், மதுரை - கோவை எக்ஸ்பிரஸ்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள், அகல ரயில் பாதையாக மேம்படுத்தப்பட்டு, 2014ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. அதன்பின், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், மூன்று பயணியர் ரயில்கள் இயங்கின.தற்போது, சென்னை எக்ஸ்பிரஸ், மதுரை - கோவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - -மதுரை 'அம்ரிதா' எக்ஸ்பிரஸ் ரயில்கள், பொள்ளாச்சி - கோவை பயணியர் ரயில் மட்டுமே இயங்குகின்றன.தினமும், ஆயிரக்கணக்கான பயணியர், இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். ஸ்டேஷனுக்கு வெளியே பயணியர் வசதிக்காக, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான 'பார்க்கிங்' வசதியும் உள்ளது.ஆனால், ஸ்டேஷன் வளாகம், பிளாட்பார்ம், பிளாட்பார்ம்களை கடக்க உதவும் மேம்பாலம் என, எந்தவொரு இடத்திலும், இது வரை ஒரு கண்காணிப்பு கேமரா கூட அமைக்கப்படவில்லை.இதனால், இந்த பகுதிகளில், செயின் பறிப்பு, மொபைல்போன் பறிப்பு உள்ளிட்ட, குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் கூட, குற்றத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த, 2017ல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில், சுவாதி கொலை செய்யப்பட்ட போதும், அதை தொடர்ந்தும், ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நடந்த, குற்ற சம்பவங்களிலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், போலீசாருக்கு பெரிதும் உதவின.அவற்றின், உதவியுடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதை, முன்வைத்து ரயில்வே பயணியர் மற்றும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் என, பலதரப்பில் இருந்து, கோரிக்கை வைத்தும், பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம், கண்டுகொள்ளாமல் உள்ளது.தெற்கு ரயில்வே நிர்வாகம் இதை கவனித்து, நுாற்றாண்டு பழமை வாய்ந்த, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், பயணியர் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதிநவீன 'நைட் விஷன்' கேமராக்களை, குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X