சூலுார் குறுமைய விளையாட்டு : அரசு பள்ளி மாணவர்கள் 'டாப்'

Added : செப் 14, 2022 | |
Advertisement
கோவை:சூலுார் குறுமைய அளவிலான டெனிகாய்ட் மற்றும் கோ - கோ போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கோவை கல்வி மாவட்டம் சூலுார் குறுமையத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரி மற்றும் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி மைதானங்களில் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று, மாணவ மாணவிகளுக்கான டெனிகாய்ட் மற்றும் கோ-கோ போட்டி,
சூலுார் குறுமைய விளையாட்டு : அரசு பள்ளி மாணவர்கள் 'டாப்'

கோவை:சூலுார் குறுமைய அளவிலான டெனிகாய்ட் மற்றும் கோ - கோ போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கோவை கல்வி மாவட்டம் சூலுார் குறுமையத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரி மற்றும் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி மைதானங்களில் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று, மாணவ மாணவிகளுக்கான டெனிகாய்ட் மற்றும் கோ-கோ போட்டி, அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரியில் நடந்தது. இதில் பெரும்பாலான போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.


மாணவிகள் டெனிகாய்ட்


14 வயது ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், சரஸ்வதி வித்யாலயா பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில், சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியையும்; இரட்டையர் பிரிவில், சின்னியம்பாளையம் அரசு பள்ளி 2 - 0 என்ற செட் கணக்கில், எஸ்.வி.எச்.எஸ்., பள்ளி அணியையும் வீழ்த்தியது. 17 வயது ஒற்றையர் பிரிவில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில், எஸ்.வி.எச்.எஸ்., பள்ளியையும்; இரட்டையர் பிரிவில், 2 - 0 என்ற செட் கணக்கில் எம்.என்.சி., பள்ளியையும் வீழ்த்தி, முதலிடம் பிடித்தது. 19 வயது பிரிவில், ஒற்றையர் இறுதிப்போட்டியில், கே.வி.எம்., பள்ளி 2 - 0 என்ற செட் கணக்கில், எம்.என்.சி., பள்ளியையும், இரட்டையர் பிரிவில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியை 2 - 0 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி, இரண்டு பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்தது.


மாணவர் கோ கோ


14 வயது இறுதிப்போட்டியில், வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 5 - 4 என்ற புள்ளிக்கணக்கில், எம்.என்.சி., பள்ளி அணியையும்; 17 வயது பிரிவில், சுகபிரம்மா மகரிஷி பள்ளி அணி 13 - 11 என்ற புள்ளிக்கணக்கில் எம்.என்.சி., பள்ளியையும்; 19 வயது பிரிவில், கிருஷ்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 19 - 17 என்ற புள்ளிக்ணக்கில், எஸ்.சி.எம்., பள்ளியையும் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X