வெற்றி இலக்குக்கு போராடிய மாணவியர்: குறுமைய தடகளத்தில் விறுவிறுப்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த கிழக்கு குறுமைய போட்டியில், வெற்றி பெற மாணவியர் போராடிய விதம், பார்வையாளர்களை கவர்ந்தது.பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைந்து நடத்துகிறது. இப்போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்று, விஸ்வதீப்தி
வெற்றி இலக்குக்கு போராடிய மாணவியர்: குறுமைய தடகளத்தில் விறுவிறுப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நடந்த கிழக்கு குறுமைய போட்டியில், வெற்றி பெற மாணவியர் போராடிய விதம், பார்வையாளர்களை கவர்ந்தது.பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி ஒருங்கிணைந்து நடத்துகிறது. இப்போட்டிகள், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்று, விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.தொடர்ந்து நேற்று, 14, 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான, 100 மீ., 600, 800, மற்றும் 3,000 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றன.ஒவ்வொரு போட்டியிலும், மாணவியர் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராடினர்.17 வயதுக்கு உட்பட்டோருக்கான, 3,000 மீட்டர் ஓட்டத்தில், மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி முதலிடமும், வடசித்துார் அரசுப்பள்ளி மாணவி பாரதி இரண்டாமிடமும், விஸ்வதீப்தி பள்ளி ஸ்ருதி மூன்றாமிடமும் பெற்றனர்.19 வயதுக்கு உட்பட்டோருக்கான, 3,000 மீட்டர் ஓட்டத்தில், மாரியம்மாள் பள்ளி ஷாலினி பிரியா முதலிடமும், காளியண்ணன்புதுார் அரசுப்பள்ளி மாணவி சுதா இரண்டாமிடமும், மாரியம்மாள் பள்ளி மாணவி தாரணி மூன்றாமிடமும் பெற்றனர்.14 வயதுக்குட்பட்ட குண்டு எறிதலில், மாரியம்மாள் பள்ளி ஜெய்ஸ்ரீ முதலிடமும், எஸ்.வி.எம்., பள்ளி அக் ஷரா இரண்டாமிடமும், வி.எம்.எச்.எஸ்., பள்ளி மோனிஷா மூன்றாமிடமும் பெற்றனர்.17 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், கஞ்சம்பட்டி அரசுப்பள்ளி சுஜித்ரா முதலிடமும்; ஏ.எம்.எஸ்., பள்ளி ஸ்ரீவர்ஷினி இரண்டாமிடமும்; வடசித்துார் பள்ளி அருணா மூன்றாமிடமும் பெற்றனர்.தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X