கொரோனாவுக்கு ஏறக்குறைய 'குட்பை':இப்போதைக்கு ஏழு பேர் மட்டும் சிகிச்சை

Added : செப் 14, 2022 | |
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், தற்போது கொரோனாவிற்கு ஏழு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இரண்டு வாரங்களாக குறைய துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்திலும், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 70க்கும் கீழ் சென்றுள்ளது. இரண்டு மாதங்களாக இறப்பு எதுவுமில்லை.மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்,

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், தற்போது கொரோனாவிற்கு ஏழு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இரண்டு வாரங்களாக குறைய துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்திலும், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் 70க்கும் கீழ் சென்றுள்ளது. இரண்டு மாதங்களாக இறப்பு எதுவுமில்லை.மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபரின் வீடுகளை சுற்றி மருத்து தெளிப்பது, பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்களை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை அரசு மருத்துவமனையில், தற்போது கொரோனாவல் பாதிக்கப்பட்டு, ஏழு பேர் மட்டுமே சிசிக்சை பெற்று வருகின்றனர்.கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகையில், 'கோவையில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளது. கடந்த காலங்களை போன்று, மூச்சுத்திணறல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்புகளுடன் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.தினமும், 250 முதல் 500 வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவிநாசி ரோடு, மருத்துவ கல்லுாரியில் பரிசோதிக்கப்பட்டு, ஒரு நாளில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X