வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த நபர்; போலீசாரிடம் ஒப்படைப்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்., நகர் வடக்கு 2 வது தெருவை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன், 54, நேற்று இவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த நபர் கதவை தட்டியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் கதவை திறக்க முயன்ற போது, எதிர் வீட்டில் இருப்பவர்கள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்., நகர் வடக்கு 2 வது தெருவை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன், 54, நேற்று இவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த நபர் கதவை தட்டியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் கதவை திறக்க முயன்ற போது, எதிர் வீட்டில் இருப்பவர்கள் சத்தம் கேட்டு யார் என கேட்டுள்ளனர்.அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர் தங்கபாண்டியன், 32, என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் செம்பட்டியில் வசித்து வருவதாகவும், ஏற்கனவே இந்த பகுதியில் குடியிருந்து வந்ததாகவும், அவருடைய தந்தை அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வருவதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு, இங்கு வந்து சுவர் ஏறி குதித்ததாக தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.இவர் வீட்டு பக்கத்து வீட்டில் தான் ஜூலை 18 ல், ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X