சூப்பர் ரிப்போர்ட்டர்

Added : செப் 14, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஏழாவது வார்டு பட்டத்தரசி அம்மன் கோவில் பின்புற தெருவில் வாறுகால், ரோடு, மின்விளக்கு வசதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக சிரமத்தை சந்தித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.பட்டத்தரசி அம்மன் கோவில் பின்புறத்தில் இருந்து மங்காபுரம் கீழ்ப்பக்கம் வடக்கு தெரு செல்லும் பகுதியில் சுமார் 150 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஏழாவது வார்டு பட்டத்தரசி அம்மன் கோவில் பின்புற தெருவில் வாறுகால், ரோடு, மின்விளக்கு வசதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக சிரமத்தை சந்தித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

பட்டத்தரசி அம்மன் கோவில் பின்புறத்தில் இருந்து மங்காபுரம் கீழ்ப்பக்கம் வடக்கு தெரு செல்லும் பகுதியில் சுமார் 150 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போதும் குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால், இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.கோயிலுக்குப் பின்புறத்தில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் தெருவில் இருபுறமும் தார் ரோடு அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் மண் ரோட்டில் சகதி ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இருக்கும் மண் தரையும் மேடு, பள்ளமாக இருப்பதால் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி கொசு தொல்லை, சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.தெருவின் இருபுறமும் வாறுகால் வசதி இல்லாததால், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது.மின் கம்பங்கள் இருந்தும் விளக்குகள் பொருத்தப்படாததால் இருண்டு காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

தெருவின் நடுப்பகுதியில் மின்கம்பம் இருப்பதால் ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நகராட்சி இடம் பலமுறை மனு கொடுத்தும் 15 ஆண்டுகளாக ரோடு மற்றும் வாறுகால் வசதி செய்யப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X