கோயில் வழிபாடு தொடர்பாக அரிவாள் வெட்டு-| Dinamalar

கோயில் வழிபாடு தொடர்பாக அரிவாள் வெட்டு-

Added : செப் 14, 2022 | |
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே கோயில் வழிபாடு தொடர்பாக தொழிலாளி தங்கபாண்டியன் 32,அரிவாளால் வெட்டப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ராஜபாளையம் அருகே கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் வடகாசி அம்மன் கோயில் வழிபாடு தொடர்பாக இரு பிரிவினருடைய
கோயில் வழிபாடு தொடர்பாக அரிவாள் வெட்டு-

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே கோயில் வழிபாடு தொடர்பாக தொழிலாளி தங்கபாண்டியன் 32,அரிவாளால் வெட்டப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் வடகாசி அம்மன் கோயில் வழிபாடு தொடர்பாக இரு பிரிவினருடைய இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் மோதல் நிலவி வருகிறது. இதனால் நிரந்தர பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மில் தொழிலாளி தங்கபாண்டியன் 32, வேலைக்கு செல்லும்போது மற்றொரு பிரிவை சேர்ந்த 3 பேர் அரிவாளால் தலை, கால் உள்ளிட்ட ஏழு இடங்களில் வெட்டியுள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலில் ஈடுபபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ப்ரீத்தி பேச்சு வார்த்தையில் நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்து உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X