இலவச பட்டா முறைகேடு வழக்குஅறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

இலவச பட்டா முறைகேடு வழக்குஅறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 14, 2022 | |
மதுரை:திருமங்கலம் அருகே எஸ்.பி.நத்தத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், யார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை அரசுத் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், எஸ்.பி.நத்தம் வெற்றிவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

மதுரை:திருமங்கலம் அருகே எஸ்.பி.நத்தத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், யார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை அரசுத் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், எஸ்.பி.நத்தம் வெற்றிவேல் தாக்கல் செய்த பொதுநல மனு:ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க எஸ்.பி.நத்தத்தில் நிலம் கையகப் படுத்தப்பட்டது; எங்களுக்கு பட்டா வழங்கவில்லை.விதிகளை மீறி அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.சட்ட விரோதமாக பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.

அந்நிலத்தை மீட்டு, எதிர்காலத்தில் ஆதி திராவிடர்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை கோரி, மதுரை கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆதி திராவிடர் நல அலுவலருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்கள் சிலருக்கு இலவச பட்டா வழங்கியுள்ளதாக மனுதாரர் தரப்பு கூறுகிறது.'யார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை அரசுத் தரப்பில் இரு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X