சுங்கச் சாவடிகளே இருக்காதுஅமைச்சர் நிதின் கட்கரி உறுதி

Updated : செப் 14, 2022 | Added : செப் 14, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி :''சுங்கச் சாவடிகளே இல்லாமல், வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் கண்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,'' என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர்
சுங்கச் சாவடிகள்,அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

புதுடில்லி :''சுங்கச் சாவடிகளே இல்லாமல், வாகனங்களின் பதிவு எண்ணை அடையாளம் கண்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,'' என, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:நாடு முழுதும் சுங்கச் சாவடிகளில், 'பாஸ்டேக்' முறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கான வருவாய், ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.கடந்த 2018 - 2019ல் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பு நேரம், எட்டு நிமிடங்களாக இருந்தது. பாஸ்டேக் முறை வந்தப் பின் அது, 47 வினாடிகளாக குறைந்து உள்ளது.இருப்பினும் சில இடங்களில் தற்போதும் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.


latest tamil news



தவிர்க்கும் வகையில், இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஒன்று, ஜி.பி.எஸ்., எனப்படும் செயற்கைக்கோள் வாயிலாக, வாகனங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பது.மற்றொன்று, வாகனங்களின் பதிவு எண்களை அடையாளம் கண்டு, அதனடிப்படையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது. இந்த முறை அமலுக்கு வந்தால், சுங்கச் சாவடிகளே தேவையிருக்காது.இதற்கான தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் உள்ளது. இருப்பினும் இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202217:37:42 IST Report Abuse
எவர்கிங் ஒட்டு மொத்த இந்திய மக்களும் தமிழக மக்கள் போல என்று இவரும் புநதுசு புதுசா பொட்டு வச்சு பூ முடிக்கிறார்.... Cut-curry
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-செப்-202210:57:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தினமும் ஒரு ஜூம்லா ன்னு நிகழ்ச்சி நடத்துறாரு.. ரோட்டிலே எலெக்ட்ரிக் லைன் போட்டு லாரி விடுவேன்னு நேத்து பீலா விட்டாரு.
Rate this:
Cancel
14-செப்-202210:07:48 IST Report Abuse
தமிழ் சுகஞ்சாவடிகளால் அபரிமிதமான வருவாய் பார்த்து பழக்கமாகிவிட்டது. ஆக இனிமேல் சுங்கசாவடிகளை அனைத்து சாலைகளிலும் எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X