அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
சென்னை:'தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டுமானப் பணியை துவக்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்' என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் தொழில்நுட்ப பூங்காக்கள் வணிக வளாகங்கள் உட்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும்

சென்னை:'தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டுமானப் பணியை துவக்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்' என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் தொழில்நுட்ப பூங்காக்கள் வணிக வளாகங்கள் உட்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
கட்டுமானப் பணிகள் துவங்கும் முன் மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.அனுமதி வழங்கும்போது வாரியம் பல நிபந்தனைகளை விதிக்கும். ஆனால் கட்டுமான நிறுவனங்கள் அவற்றை முறையாகப் பின்பற்றுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் வைத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


அதன் விபரம்


* தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் தொழில்நுட்ப பூங்காக்கள் வணிக வளாகங்கள் வாரியத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்
* ஏற்கனவே அனுமதி பெற்று புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அதை புதுப்பிக்க வேண்டும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு கீழ் உள்ள கட்டடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெற வேண்டும்.இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்படும்
* அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு குடியிருப்போர் நல சங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டிருந்தால் அந்த சங்கம் அனுமதி பெற வேண்டும். கழிவு நீர் வாரியம் நிர்ணயித்த தர அளவுக்கு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யவும் மரங்கள் வளர்ப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்
* சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க தொடர் கண்காணிப்பு கருவி பொருத்தி மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் நீர் தர கண்காணிப்பு மையத்துடன் இணைக்க வேண்டும்* திடக்கழிவுகள் சரிவர சேகரிக்கப்பட வேண்டும்
* இவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க திடீர் ஆய்வு நடத்தப்படும்
* நிபந்தனைகள் பின்பற்றப்படா விட்டால் வளாகங்களை மூடவும் மின் இணைப்பை துண்டிக்கவும் 'சீல்' வைக்கவும் வாரியம் நடவடிக்கை எடுக்கும். அந்த வளாக உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்கப்படுவதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்
* சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை 'டேங்கர்' லாரிகளில் எடுத்து சென்று சாலையோரம் கால்வாய்கள் நீர் நிலைகளில் விடுவது கண்டறியப்பட்டால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வாரியம் அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X