அ.தி.மு.க., - மா.செ.,க்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

Added : செப் 14, 2022 | |
Advertisement
சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்த மனு:கடந்த ஜூலை

சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுவுக்கு பதில் அளிக்க, சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஜே.சி.டி.பிரபாகர் தாக்கல் செய்த மனு:கடந்த ஜூலை 11ல், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகம் செல்ல முடிவெடுத்தோம்.
நாங்கள் வந்தபோது, பழனிசாமியின் ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்கள் கல் வீசினர்.கட்சி அலுவலகம் முன், கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தவர்கள், பன்னீர்செல்வம் உடன் வந்தவர்களை தாக்கினர்.பழனிசாமியின் துாண்டுதலின்படி, மாவட்டச் செயலர்கள் சத்யா, ரவி, அசோக், ஆதிராஜாராம் ஆகியோர் தலைமை அலுவலகத்துக்குள் அடையாளம் தெரியாத நபர்களுடன் இருந்தனர்.நாங்கள் கட்சி அலுவலகத்துக்குள் வந்ததை பொறுக்க முடியாமல், அங்கு இருந்தவர்கள் தகராறு செய்தனர்; ஆவணங்களை துாக்கி வீசினர்.
பன்னீர்செல்வத்துடன் வந்தவர்கள் ஆவணங்களை சேகரித்து, அவரது வாகனத்தில் பாதுகாப்பாக வைத்தனர். பின், போலீசார் அங்கு வந்த உடன், மாவட்டச் செயலர்கள் இடத்தை காலி செய்தனர்.கட்சி அலுவலகத்துக்குள் குண்டர்களை ஏவி விட்டு, பொருள் சேதங்களை ஏற்படுத்த துாண்டிய பழனிசாமி, சி.வி.சண்முகம், கலவரம் மற்றும் பொருள் சேதம் ஏற்படுத்திய சத்தியா, ரவி, அசோக், ஆதி ராஜாராம் ஆகியோர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி, புகார் அளிக்கப்பட்டது; எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
ஆனால், சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில், எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனவே, நான் அளித்த புகாரை விசாரிக்கும்படி, சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிட வேண்டும். உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் போலீஸ் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 19க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X