மாயமான மாணவர்அம்பத்துாரில் மீட்பு

Added : செப் 14, 2022 | |
Advertisement
டி.பி.,சத்திரம், :ஒரு மாதத்திற்கு முன் மாயமான விருகம்பாக்கம் சிறுவன், அம்பத்துாரில் மீட்கப்பட்டார். விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 49. அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன், அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பெற்றோருடன் கடந்த 19ம் தேதி, டி.பி., சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோவிலுக்கு சிறுவனும்


டி.பி.,சத்திரம், :ஒரு மாதத்திற்கு முன் மாயமான விருகம்பாக்கம் சிறுவன், அம்பத்துாரில் மீட்கப்பட்டார். விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 49. அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன், அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பெற்றோருடன் கடந்த 19ம் தேதி, டி.பி., சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கோவிலுக்கு சிறுவனும் வந்துள்ளார். அப்போது, சிறுவன் மாயமாகி உள்ளார். இரண்டு நாட்களாகியும் மகன் வீடு திரும்பாததால் டி.பி.,சத்திரம் காவல் நிலையத்தில், ஜெயசீலன் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், அம்பத்துார் பகுதியில் அந்த சிறுவன் வேலை செய்து வந்தது தெரியவந்தது. நேற்று முன் தினம் சிறுவனை மீட்ட போலீசார், அவரிடம் விசாரித்தனர். படிப்பில் ஆர்வம் இல்லாததால், வீட்டில் இருந்து வெளியேறி, வேலைக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை எச்சரித்து பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X