வயதான தம்பதிதுாக்கிட்டு தற்கொலை

Added : செப் 14, 2022 | |
Advertisement
சேலையூர், :சேலையூர், ராஜா அய்யர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 73. அவரது மனைவி கங்காதேவி, 62. இருவரும், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.நேற்று மாலை, பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்து வர, ஆனந்தனின் மருமகள் ஆஷாதேவி சென்றார். திரும்பி வந்தபோது, தனி அறையில், மாமனார் மற்றும் மாமியார் இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்தது


சேலையூர், :சேலையூர், ராஜா அய்யர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 73. அவரது மனைவி கங்காதேவி, 62. இருவரும், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.நேற்று மாலை, பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்து வர, ஆனந்தனின் மருமகள் ஆஷாதேவி சென்றார். திரும்பி வந்தபோது, தனி அறையில், மாமனார் மற்றும் மாமியார் இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.ஆனந்தனுக்கு கண்பார்வை குறைந்ததும், அவரது மனைவி கங்காதேவிக்கு முடக்கு வாதம் ஏற்பட்டும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.வெளியில் எங்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த தம்பதி, ஒரே நேரத்தில் தற்கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் வழக்குப் பதிந்து தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X