கல் குவாரி உரிமையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
பல்லடம்:திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் பச்சை துண்டுடன் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.சமூக ஆர்வலர் போர்வையில், கல்குவாரி தொழிலுக்கு நெருக்கடி அளித்து வருபவர்களிடம் இருந்து தொழிலை காப்பாற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து கல்குவாரிகள், கிரஷர்
கல் குவாரி உரிமையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

பல்லடம்:திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் பச்சை துண்டுடன் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.சமூக ஆர்வலர் போர்வையில், கல்குவாரி தொழிலுக்கு நெருக்கடி அளித்து வருபவர்களிடம் இருந்து தொழிலை காப்பாற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்கள் செயல்படவில்லை. 700க்கும் அதிகமான டிப்பர் லாரிகள், ஆர்.எம்.சி., பொக்லைன், கிரேன் உள்ளிட்டவை காரணம்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டன.கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி கூறியதாவது:அரசு விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு, சமூக ஆர்வலர் போர்வையில் உள்ள சிலர் வேண்டு மென்று இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். நாங்களும் விவசாய தொழில் ஈடுபட்டு வருகிறோம்.கனிம வளங்களை திருடுவதோ, விவசாய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோ எங்கள் நோக்கமல்ல. சமூக விரோதிகளின் நெருக்கடியில் இருந்து கல்குவாரி தொழிலை காப்பாற்ற வேண்டும். அரசுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இரண்டு நாள், வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, காரணம்பேட்டையில், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்குவாரி உரிமையாளர்கள் பச்சை துண்டு அணிந்தபடி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X