கம்பம் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றுக்கு ஆயத்தம்

Added : செப் 14, 2022 | |
Advertisement
கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றுக்கு விண்ணப்பிக்க ஆயத்தமாகி வருகிறது. கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்ட அளவில் அதிக பிரசவங்கள் நடைபெறுகிறது. இங்கு பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர், இரு நவீன ஆப்பரேஷன் தியேட்டர் வசதிகளும் உள்ளன.அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள், இங்குள்ள வசதிகளின் அடிப்படையில் மாநில

கம்பம் : கம்பம் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றுக்கு விண்ணப்பிக்க ஆயத்தமாகி வருகிறது.

கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்ட அளவில் அதிக பிரசவங்கள் நடைபெறுகிறது. இங்கு பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர், இரு நவீன ஆப்பரேஷன் தியேட்டர் வசதிகளும் உள்ளன.அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள், இங்குள்ள வசதிகளின் அடிப்படையில் மாநில அளவில் தரச்சான்று வழங்கப்பட்டது. அடுத்து தேசிய தரச்சான்று பெற பணிகள் நடந்து வருகிறது.

மருத்துவ அலுவலர் ஜெ.பொன்னரசன் கூறுகையில், " தேசிய தரச்சான்றுக்கு இணை இயக்குநரின் ஒப்புதலுடன் கலெக்டர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தரச்சான்று பெற மருத்துவமனையில் உள்ள 10 பிரிவுகள் 70 மதிப்பெண்கள் பெற வேண்டும். டில்லியில் இருந்து தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்வார்கள். தேசிய தரச்சான்றுக்கு பெற்றால் மத்திய அரசு ஆண்டிற்கு ரூ.17.40 லட்சம் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கும். அந்த நிதியை மருத்துவமனை மேம்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்" என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X