பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் | Dinamalar

பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்

Added : செப் 14, 2022 | |
உத்தமபாளையம் : சுருளியாறு, வராக நதி துணை வடிநிலப் பகுதி திட்டத்தில் பசுக்களில் மலடு நீக்க சிகிச்சைகள் கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டுள்ளது.நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் சுருளியாறு, வராக நதி துணை வடிநிலப்பகுதிகளில் பசுக்களுக்கு மலடு நீக்கம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் பருவம் வராத பசுக்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், சினை ஊசி செலுத்துதல்,

உத்தமபாளையம் : சுருளியாறு, வராக நதி துணை வடிநிலப் பகுதி திட்டத்தில் பசுக்களில் மலடு நீக்க சிகிச்சைகள் கால்நடை பராமரிப்பு துறை மேற்கொண்டுள்ளது.

நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் சுருளியாறு, வராக நதி துணை வடிநிலப்பகுதிகளில் பசுக்களுக்கு மலடு நீக்கம் செய்யும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் பருவம் வராத பசுக்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், சினை ஊசி செலுத்துதல், கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படும். சுருளியாறு துணை வடிநிலப்பகுதியில் செப்.5 ல் துவங்கி செப். 22 வரை 24 இடங்களில் நடக்கிறது.



வராகநதி துணை வடிநிலப்பகுதியில் செப். முதல் தேதி முதல் 16 ம் தேதி வரை தென்கரை, ஜெயமங்கலம் பகுதியில் 17 இடங்களில் முகாம் நடக்கிறது. முகாம்களில் கால்நடை வளர்போர் பசுக்களுக்கு சிகிச்சை பெறலாம் என கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X