இது உங்கள் இடம்: இதை எல்லாம் செய்வாரா ஸ்டாலின்?

Added : செப் 14, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் கருணாநிதி காட்டிய வழியில் ஆட்சி நடத்துகிறோம்' என்று, அடிக்கடி தம்பட்டம் அடிப்பவர் முதல்வர் ஸ்டாலின். இப்போது அவர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டிய வழியில், பயணம் செய்ய
DMK, MK Stalin, Stalin, CM Stalin, திமுக, ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஈ.வெ.ரா., அண்ணாதுரை மற்றும் கருணாநிதி காட்டிய வழியில் ஆட்சி நடத்துகிறோம்' என்று, அடிக்கடி தம்பட்டம் அடிப்பவர் முதல்வர் ஸ்டாலின். இப்போது அவர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டிய வழியில், பயணம் செய்ய ஆரம்பித்து விட்டாரோ என்ற, 'டவுட்' நமக்கு வந்துள்ளது.

அதற்கேற்ற வகையில், டில்லி சென்ற ஸ்டாலின், அங்கு அரசு பள்ளிகள் செயல்படும் முறையை பார்த்து, தமிழகத்திலும், 21 தகைசால் பள்ளிகள் மற்றும் 14 மாதிரி பள்ளிகள் திட்டத்தை துவக்கிஉள்ளார்; இந்த முயற்சி வரவேற்கத்தக்கதே. இதேபோல, கல்வி விஷயத்தில், கெஜ்ரிவால் அரசு பின்பற்றும் மற்ற கொள்கைகளையும், முதல்வர் ஸ்டாலின் பின்பற்ற வேண்டும்...


latest tamil news


* 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோருவதை விடுத்து, அந்த தேர்வை அரசு பள்ளி மாணவர்களும் தைரியமாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பான பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

* 'நீட்' தேர்வுக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்ளும் மாணவ - மாணவியர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும்

* மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும்

* அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் ஹிந்தி மொழியை கற்க ஏற்பாடு செய்ய வேண்டும்

* எந்தப் போட்டித் தேர்வை கண்டும் மாணவர்கள் பயப்படாத வகையில், அரசு பள்ளிகளில் சிறப்பான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

* மாநிலம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளையும், டில்லியில் உள்ளது போன்ற பள்ளிகளாக மாற்ற வேண்டும்.இது போன்ற இன்னும் பல நல்ல காரியங்களையும் செய்ய வேண்டும். அப்படி செய்தால், தமிழகமே தகைசால் மாநிலமாக மாறும். அது தான், தமிழகத்திற்கு உண்மையான விடியல்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
14-செப்-202220:19:53 IST Report Abuse
sankar அதெல்லாம் தேவையே இல்லை - இந்திய ஒரே தேசம் இல்லை என்று சொல்லும் திமுக தடை செய்யப்படவேண்டும் - திமுக அரசு கலைக்கப்படவேண்டும் - மத்தியஅரசின் நேரடி ஆட்சியின் கீழே தமிழகம் வரவேண்டும்
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
14-செப்-202219:53:43 IST Report Abuse
T.sthivinayagam மேல் படிப்புக்கு உதவாத ஹிந்தியை எழுத படிக்க தெரிந்தாலே போதும். நம்ம மத்திய நிதி அமைச்சர் ஹிந்தியிலா படித்தார் மிக சிறப்பாக செய்படுகிறாரே.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
14-செப்-202218:30:47 IST Report Abuse
Soumya அப்போ திராவிஷ மாதல்ன்னு புரூடா விடியலுக்கு ஏலாதே மாணவர்கள் படித்துவிட்டால் டாஸ்மாக் யாவாராம் என்னவாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X