சிறையில் கைதி மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

Added : செப் 14, 2022 | |
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் தண்டனை கைதியை தாக்கிய கொலை வழக்கு குற்றவாளி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.காலாப்பட்டு சிறைச்சாலை, அறை எண் 10ல் பெருமாள்ராஜா,37; என்பவர், கடந்த 2008ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில், தண்டனை பெற்று கைதியாக உள்ளார்.அறை எண் 3ல் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர், லாஸ்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொலை வழக்கில் தண்டனை



புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் தண்டனை கைதியை தாக்கிய கொலை வழக்கு குற்றவாளி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.காலாப்பட்டு சிறைச்சாலை, அறை எண் 10ல் பெருமாள்ராஜா,37; என்பவர், கடந்த 2008ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில், தண்டனை பெற்று கைதியாக உள்ளார்.அறை எண் 3ல் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஜெயபால் என்பவர், லாஸ்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார்.கடந்த 9ம் தேதி மாலை 5.20 மணிக்கு, ஜெயபால் காரணமின்றி அறைக்கு வந்ததை பெருமாள்ராஜா கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.இதுபற்றி, பெருமாள்ராஜா, சிறை அதிகாரியிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால், பெருமாள்ராஜாவை தாக்கி, தன் மீது புகார் கொடுத்தால், பி.சி.ஆர்., செல்லில் புகார் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், ஜெயபால் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X